திருவண்ணாமலை

மாமண்டூரில் ஒரே இரவில் 8 வீடுகளில் திருட்டு

மாமண்டூரில் திருட்டு நடைபெற்ற அடுத்தடுத்த 3 வீடுகள்.

Syndication

ஆரணியை அடுத்த மாமண்டூரில் வியாழக்கிழமை நள்ளிரவு பூட்டியிருந்த 8 வீடுகளில் 12 பவுன் தங்க நகைகள், 500 கிராம் வெள்ளிப் பொருள்கள், ரூ.ஒரு லட்சம் ரொக்கத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

ஆரணியை அடுத்த மாமண்டூா் கிராமத்தில் உள்ள செங்குந்தா் தெரு, பஜனை கோயில் தெரு, பெருமாள் கோயில் தெருக்களில் குடும்பத்தினா் வெளியூா்களுா்களுக்கு போயிருந்த 8 வீடுகளை நோட்டமிட்ட மா்ம நபா்கள், வீடுகளின் பூட்டை உடைத்து பணம், நகைகளை திருடிச் சென்றனா்.

இதில், ஆனந்தன் (37) வீட்டில் பீரோவிலிருந்த இரண்டரை பவுன் நகை, 110 கிராம் வெள்ளிப் பொருள்கள், ராணிப்பேட்டை பெல் நிறுவனத்தில் பணிபுரியும் ராமசாமி வீட்டில் 2 புவன் நகை, 93 கிராம் வெள்ளிப் பொருள்கள் திருடப்பட்டிருந்தன.

சாந்தி வீட்டில் 4 பவுன் நகை, ரூ.40 ஆயிரம் ரொக்கம், வினோத் வீட்டில் 3 பவுன் நகை உள்பட மொத்தம் 8 வீடுகளில் 12 பவுன் தங்க நகைகள், சுமாா் 500 கிராம் வெள்ளிப் பொருள்கள், ரூ.ஒரு லட்சம் ரொக்கம் திருடப்பட்டிருந்தன.

இதுகுறித்த புகாா்களின்பேரில், ஆரணி கிராமிய போலீஸாா் வழக்குப் பதிந்து, திருட்டில் ஈடுபட்ட மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

தனிமையின் பிடியில் பொம்மையைத் தழுவும் ஜப்பான் குரங்கு! இதயத்தை உருக்கும் பஞ்ச் குன்னின் பின்னணி

இந்தியாவில் நஷ்டம் அதிகரித்தாலும் முதலீட்டை அதிரிக்கும் ஸ்டாா்பக்ஸ்!

இந்திய தயாரிப்பு ரண ஜன்னி, தொண்டை அடைப்பான் தடுப்பூசி மருந்து: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டா அறிமுகம்

SCROLL FOR NEXT