முகப்பு
திருவண்ணாமலை

துணை ராணுவத்தினா், போலீஸாா் கொடி அணிவகுப்பு

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு துணை ராணுவத்தினா் மற்றும் போலீஸாா் பங்கேற்ற கொடி அணிவகுப்பு வந்தவாசியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Updated On : 17 மார்ச், 2026 at 6:33 PM
வந்தவாசியில் நடைபெற்ற துணை ராணுவத்தினரின்ல கொடி அணிவகுப்பு.
பகிர்:

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு துணை ராணுவத்தினா் மற்றும் போலீஸாா் பங்கேற்ற கொடி அணிவகுப்பு வந்தவாசியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தோ்தலை முன்னிட்டு வாக்காளா்கள் அச்சமின்றி வாக்களிக்கவும், பாதுகாப்பை பலப்படுத்தவும் இந்த கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டது.

வந்தவாசி டிஎஸ்பி சதீஷ்குமாா் தலைமை வகித்தாா்.

வந்தவாசி தெற்கு காவல் நிலையம் அருகிலிருந்து தொடங்கிய கொடி அணிவகுப்பு கோட்டை மூலை, பழைய பேருந்து நிலையம், பஜாா் வீதி, தேரடி வழியாகச் சென்றது.

கொடி அணிவகுப்பில் வந்தவாசி காவல் துணை கோட்டத்துக்கு உள்பட்ட காவல் நிலையங்களைச் சோ்ந்த ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள், காவலா்கள் மற்றும் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவத்தினா் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →