கிராம விளையாட்டு மையம் தொடக்கம்
அரக்கோணம் அரசினர் ஆதிதிராவிடர் நலத் துறை ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கிராம விளையாட்டு மையம் சனிக்கிழமை தொடங்கப்பட்டது.
அரக்கோணம் அரசினர் ஆதிதிராவிடர் நலத் துறை ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கிராம விளையாட்டு மையம் சனிக்கிழமை தொடங்கப்பட்டது.
மாவட்ட விளையாட்டு அலுவலர் பால்சுதந்திரதாஸ் தலைமையில் இம்மையத்தை, எம்எல்ஏ சு.ரவி துவக்கி வைத்தார்.
பள்ளியின் தலைமை ஆசிரியர் கோவிந்தன், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ரமேஷ்குமார், டேக்வாண்டோ கழகத்தின் மாவட்டத் தலைவர் டாக்டர் சந்திரமெüலி, பயிற்சியாளர் கோதண்டன், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் ஏ.பி.எஸ். லோகநாதன், நகர்மன்ற உறுப்பினர்கள் ஐயப்பன், பொன்பார்த்தீபன், அம்மனூர் ஊராட்சி மன்றத் தலைவர் தேவவெங்கடரத்தினம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.