மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் உன்னத திட்டங்களை வழங்குகிறார் முதல்வர்
மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் முதல்வர் ஜெயலலிதா அறிவிக்கும் திட்டங்கள் எவராலும் குறை சொல்ல முடியாத உன்னத திட்டங்களாகும் என அமைச்சர் முகமதுஜான் கூறினார்.
வேலூர்மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் உன்னத திட்டங்களை வழங்குகிறார் முதல்வர்
மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் முதல்வர் ஜெயலலிதா அறிவிக்கும் திட்டங்கள் எவராலும் குறை சொல்ல முடியாத உன்னத திட்டங்களாகும் என அமைச்சர் முகமதுஜான் கூறினார்.
மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் முதல்வர் ஜெயலலிதா அறிவிக்கும் திட்டங்கள் எவராலும் குறை சொல்ல முடியாத உன்னத திட்டங்களாகும் என அமைச்சர் முகமதுஜான் கூறினார்.
ராணிப்பேட்டை நகராட்சி திருமண மண்டபத்தில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவில், ஆர்க்காடு, திமிரி, சோளிங்கர், வாலாஜா, அரக்கோணம், காவேரிப்பாக்கம், நெமிலி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 1,002 பேருக்கு ரூ.3 கோடியே 1 லட்சத்து 25 ஆயிரம் திருமண நிதியுதவிக்கான காசோலைகள் மற்றும் தாலிக்கு தங்கத்தை முகமதுஜான் வழங்கினார்.
விழாவில் அவர் மேலும் பேசியதாவது:
மக்களின் அடிப்படை தேவைகளான உணவு, உடை, உறைவிடம் ஆகியவற்றுக்கு உத்தரவாதம் அளிக்கும் மக்களாட்சியை முதல்வர் ஜெயலலிதா நடத்தி வருகிறார்.
தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற நாள்தோறும் ஒரு நலத் திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார் என்றார் அமைச்சர்.
விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் பொ.சங்கர் தலைமை தாங்கினார். எம்எல்ஏக்கள் வி.கே.ஆர்.சீனிவாசன், சு.ரவி, நகர்மன்றத் தலைவர்கள் சித்ரா சந்தோஷம் (ராணிப்பேட்டை), வேதகிரி (வாலாஜா),
அப்துல்ரஹ்மான் (மேல்விஷாரம்), ஒன்றியக் குழுத் தலைவர்கள் வி.கே.நிர்மலா (வாலாஜா),
வி.மூர்த்தி (திமிரி), ராணிப்பேட்டை நகர்மன்ற துணைத்
தலைவர் ஜே.பி.சேகர், உறுப்பினர் கே.பி.சந்தோஷம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.