வேலூர்

தேசிய திறனாய்வுத் தேர்வு: 7,155 மாணவர்கள் எழுதினர்

DIN

கல்வி உதவித் தொகை பெறுவதற்காக 7, 8 ஆகிய வகுப்பு மாணவர்களுக்கு மாநில அரசால் நடத்தப்படும் தேசிய திறனாய்வுத் தேர்வுகள் சனிக்கிழமை நடைபெற்றன. இதில், மாவட்டத்தில் 7,155 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
தமிழகம் முழுவதும் 472 மையங்களில் 1 லட்சத்து 59ஆயிரத்து 548 பேர் இந்தத் தேர்வை எழுதினர். தேர்வுகள் இரண்டாகப் பிரிக்கப்பட்டு காலை 9.30 முதல் 11 மணி வரை மனத்திறன் தேர்வாகவும், 11.30 முதல் 1 மணி வரை கல்வித் திறன் தேர்வாகவும் நடத்தப்பட்டன.
வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு நிதியுதவி பெறும் நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த 7,155 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். நடுநிலை பள்ளிகளில் இருந்து மட்டும் 1,629 மாணவவர்கள் பங்கேற்றனர்.
அரக்கோணம் வட்டாரத்தில் தூய அந்திரேயர் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த மையத்தில் நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த 192 மாணவர்கள் தேர்வு எழுதினர். தேர்வு கண்காணிப்புப் பணியில் மூதூர் அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியை எஸ்.பி.பூங்கொடி, கணபதிபுரம் அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியை ஆர்.கமலா ஆகியோர் ஈடுபட்டனர்.
தேர்வுகள் குறித்து பெற்றோர் கூறுகையில், கடந்த 3 ஆண்டுகளாக இத்தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றதாய் அறிவிக்கப்பட்ட மாணவ, மாணவிகளுக்கு இதுவரை உதவித் தொகை வழங்கவில்லை. தேர்ச்சி பெறும் மாணவ, மாணவிகளுக்கு உதவித் தொகையை உடனே அனுப்ப வேண்டும் என்றனர்.
குடியாத்தத்தில்...
பேர்ணாம்பட்டு இஸ்லாமிய உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற தேர்வை, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் குணசேகரன் பார்வையிட்டார். பேர்ணாம்பட்டு வட்டார உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் ஜார்ஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கன்னியாகுமரி மாவட்ட அஞ்சலகங்களில் சிறப்பு ஆதாா் சேவை

விளையாட்டு விடுதியில் சேர விண்ணப்பிக்கலாம்

செந்தில் பாலாஜி ஜாமீன் மனு: விசாரணை மே 6-க்கு ஒத்திவைப்பு

சிறப்பு திட்ட முறைகளை பயன்படுத்தி கோடை பயிா்களை பாதுகாக்க அறிவுறுத்தல்

டிடிஇஏ பள்ளிகளில் பாரதிதாசன் பிறந்த நாள் விழா

SCROLL FOR NEXT