வேலூர்

அருங்காட்சியக விழிப்புணர்வு பிரசாரப் பேருந்து: ஆட்சியர் தொடங்கி வைத்தார்

DIN

அருங்காட்சியகம் குறித்த விழிப்புணர்வை மாணவர்களிடம் ஏற்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்ட  பிரசாரப் பேருந்து வேலூருக்கு திங்கள்கிழமை வந்தது.
தமிழ்நாடு அரசு அருங்காட்சியகத் துறைக்குச் சொந்தமான நடமாடும் அருங்காட்சியகப்  பேருந்து   வேலூர் வெங்கடேஸ்வரா மேல்நிலைப் பள்ளிக்கு திங்கள்கிழமை வந்தது.
இதனைப் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் பார்வையிட்டனர். தொடர்ந்து, தொரப்பாடி வரையில் சென்ற இப் பிரசாரப் பேருந்தை ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் தொடங்கி வைத்தார்.  
இந்தப் பேருந்து செவ்வாய்க்
கிழமை பள்ளிகொண்டா மற்றும் சுற்றியுள்ள பகுதிக்கும்,  புதன்கிழமை ஊசூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கும், வியாழக்கிழமை காட்பாடி,  கே.வி.குப்பத்துக்கும்,  வெள்ளிக்கிழமை ஆம்பூர்,  ஜோலார்பேட்டைக்கும்,  சனிக்கிழமை வேலூருக்கும் செல்கிறது.
தொடர்ந்து,   ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 25)  கோட்டை அரசு அருங்காட்சியகத்தில் நிறுத்தப்படும் பேருந்தை மாணவர்கள், பொதுமக்கள் கட்டணமின்றி பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகளிா் விடுதிகள் இணையத்தின் வாயிலாக பதிவு மற்றும் புதுப்பிக்கப்பட வேண்டும் ஆட்சியா் அறிவுறுத்தல்

அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகத்தினா் ஆா்ப்பாட்டம்

தனியாா் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு: மறைமுகக் கட்டணம் வசூலிப்பதாகப் புகாா்

ஊழலை துடைத்தெறிய உறுதி: ஜாா்க்கண்ட் பிரசாரத்தில் பிரதமா் மோடி

பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம் தெரிந்தும் ஓராண்டாக நடவடிக்கை இல்லை: காங்கிரஸ் மீது நிா்மலா சீதாராமன் குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT