முகப்பு
வேலூர்

அரசுப் பள்ளியில் கவிதைப் போட்டி

காட்பாடி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் இசைக் கருவிகள் வாசித்தல், கவிதைப் போட்டி வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:01 PM
பகிர்:

காட்பாடி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் இசைக் கருவிகள் வாசித்தல், கவிதைப் போட்டி வியாழக்கிழமை நடைபெற்றது.
வேலூர், திருப்பத்தூர் கல்வி மாவட்ட அளவில் மாணவர்களின் தனித் திறனை வெளிக் கொணரும் வகையில் 11 வகையான போட்டிகள் 4 மையங்களில் நடைபெற்றன.
இதில், காட்பாடி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இசைக் கருவிகள் வாசித்தல், தமிழ் கவிதைப் போட்டி தொடக்க விழாவுக்கு தலைமை ஆசிரியை கோ.சரளா தலைமை வகித்தார்.
அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ஜி.பழனி, கிளித்தான்பட்டறை கல்வி உலகம் உயர்நிலைப் பள்ளி  தலைமை ஆசிரியர் எஸ்.எஸ்.சிவவடிவு ஆகியோர் முன்னிலை வகித்தனர். இளையோர் செஞ்சிலுவைக் கல்வி மாவட்ட  அமைப்பாளர் செ.நா.ஜனார்த்தனன் வரவேற்றார்.
சேர்க்காடு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் டி.அன்புரோஸ், குடியாத்தம் ஆர்.எஸ் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சி.சீராமுலு ஆகியோர் போட்டிகளைத் தொடங்கி வைத்தனர்.
மாவட்டம் முழுவதிலும் இருந்து 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். இளையோர் செஞ்சிலுவை கல்வி மாவட்டப் பொருளாளர் எ.ஆனந்தன் நன்றி கூறினார்.

முழு கட்டுரையைப் படிக்க →