லஞ்ச ஒழிப்பு தினம் கடைப்பிடிப்பு
காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்புத் தினம் புதன்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.
வேலூர்லஞ்ச ஒழிப்பு தினம் கடைப்பிடிப்பு
காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்புத் தினம் புதன்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.
காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்புத் தினம் புதன்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு, பள்ளித் தலைமை ஆசிரியர் (பொறுப்பு) டி.கே.செல்வராஜன் தலைமை வகித்தார். உதவித் தலைமை ஆசிரியை கே.மஞ்சுளா மகிமைச் செல்வி முன்னிலை வகித்தார். நாட்டு நலப் பணித் திட்ட முதன்மை அலுவலர் க.ராஜா வரவேற்றார்.
வேலூர் ஊழல் தடுப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை ஆய்வாளர்கள் விஜய், விஜயலட்சுமி, உதவி ஆய்வாளர் ராஜேந்திரன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்து கொண்டு பேசினர்.
இதில், திரளான மாணவர்கள் கலந்து கொண்டனர். ஆசிரியர் ச.சச்சிதானந்தம் நன்றி கூறினார்.