வேலூர்

முதியோர் இல்லத்தில் குறைகளைக் கேட்ட நீதிபதி

DIN

வாணியம்பாடி வட்ட சட்டப் பணிகள் குழு சார்பில் முதியோர் இல்லத்தில் சார்பு நீதிமன்ற நீதிபதி குறைகளைக் கேட்டறிந்தார்.
வாணியம்பாடி வட்ட சட்டப் பணிகள் குழு சார்பில் பெருமாள்பேட்டையில் இயங்கி வரும் பெராக்கா சிறுவர் இல்லம் மற்றும் ஆதரவற்றோர் முதியோர் இல்ல வளாகத்தில் ஒரு நாள் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
முகாமிற்கு, வாணியம்பாடி சார்பு நீதிமன்ற நீதிபதி ராமச்சந்திரன் தலைமை வகித்தார். உரிமையியல் நீதிமன்ற நீதிபதி ஜெனீபர், அரசு வழக்குரைஞர்கள் காந்தி, ஆனந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இல்லக் காப்பாளர் டேவிட்சுபாஷ் வரவேற்றார்.
முகாமில், வட்ட சட்டப் பணிகள் மூலம் தீர்வு காண்பது பற்றியும், அதன் பயன்கள் குறித்தும் நீதிபதி ராமச்சந்திரன் விளக்கமளித்தார். இல்லத்தில் தங்கிப் படித்து வந்த பிள்ளைகளில் சிலர் உயர் கல்விக்கு சென்றுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. அதேபோல மற்ற மாணவர்களும் உயர் கல்விக்குச் செல்ல வேண்டும் என்றார்.
இதைத் தொடர்ந்து, நேதாஜி நகர் பகுதியில் உள்ள முதியோர் இல்லத்துக்குச் சென்ற நீதிபதி அங்கிருந்த முதியோர்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார். அப்போது, முதியோர் உதவித் தொகையைப் பெற்றுத் தர வேண்டும் என்று சிலர் கோரிக்கை வைத்தனர். இதுதொடர்பான மனுவை வருவாய்த் துறைக்கு அனுப்பி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.
இதில், வழக்குரைஞர்கள் உமர், பாபு, சத்தியமூர்த்தி, அம்மு ஆகியோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிகரித்த தங்கம் விலை: இன்றைய நிலவரம்!

வணங்கான் வெளியீட்டு பணிகள் தீவிரம்!

தென்னிந்தியாவில் பாஜகவுக்கு வரவேற்பு; 100 தொகுதிகளில் வெல்லும்: அமித் ஷா

நத்தத்தில் திடீர் தீ விபத்து: ரூ. 40 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து நாசம்!

தேவகெளடா பேரன் மீது நடவடிக்கை தேவை: அமித் ஷா

SCROLL FOR NEXT