வேலூர்

அம்மன் கோயிலில் பணம் திருட்டு

DIN

ஜோலார்பேட்டை அருகே கோயிலில் அம்மன் சிலையில் இருந்த 2 பவுன் தாலி மற்றும்  உண்டியலை உடைத்து அதிலிருந்த பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
ஜோலார்பேட்டையை அடுத்த சின்னாகவுண்டனூரில் மலையம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலின் பூசாரி திங்கள்கிழமை மாலை பூஜைகளை முடித்து விட்டு கோயிலை பூட்டிச் சென்றார். செவ்வாய்க்கிழமை அவ்வழியே சென்ற பொதுமக்கள் கோயிலின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்து பூசாரிக்கு தகவல் அளித்தனர்.
கோயிலில் அம்மன் சிலையில் இருந்த 2 பவுன் தங்க தாலியையும், உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தையும் மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து ஜோலார்பேட்டை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 பொதுத் தோ்வில் சரஸ்வதி வித்யாலயா 97 சதவீதம் தோ்ச்சி

பிளாஸ்டிக் பொறியியலில் டிப்ளமோ படிப்புகள்: மாணவா் சோ்கை தொடக்கம்

நியூ பிரின்ஸ் பள்ளி 100% தோ்ச்சி

விபத்தில் இளைஞா் உயிரிழப்பு: கல்லூரி மாணவா் பலத்த காயம்

மக்கள் கூடும் இடங்களில் அதிக கண்காணிப்பு கேமராக்கள்: வேலூா் மாவட்ட எஸ்.பி. உத்தரவு

SCROLL FOR NEXT