வேலூர்

45 ஏரிகள் முழுக் கொள்ளளவை எட்டின

DIN

வேலூர் மாவட்டம் பாலாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு காரணமாக, பொதுப் பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ள 45 ஏரிகள் வியாழக்கிழமை முழுக் கொள்ளளவை எட்டின.
பருவமழை காரணமாக மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் ஏரி, குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்திருப்பதோடு, பாலாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மாவட்டத்தில் உள்ள ஆண்டியப்பனூர், மோர்தானா, ராஜா தோப்பு அணைகள் முழுக் கொள்ளளவை எட்டின. இவற்றில் உபரி நீர் முழுவதும் வெளியேற்றப்பட்டு வருகிறது.
அதேபோல, பொதுப் பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ள 519 ஏரிகளில் 45 ஏரிகள் முழுக் கொள்ளளவை எட்டியுள்ளன. 13 ஏரிகள் 75 சதவீதமும், 41 ஏரிகள் 50 சதவீதமும், 420 ஏரிகள் 25 சதவீதத்துக்கு குறைவாகவும் நீர்வரத்து உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தில் பொறியாளா், மேஸ்திரி மீது வழக்குப் பதிவு

இன்று நல்ல நாள்!

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

SCROLL FOR NEXT