முகப்பு
தமிழ்நாடு

சென்னை - போடி விரைவு ரயில் மார்ச் 19 முதல் வாரத்தில் 6 நாள்கள் இயக்கம்!

சென்னை சென்ட்ரல் - போடிநாயக்கனூர் விரைவு ரயில் மார்ச் 19 முதல் வாரத்தில் 6 நாள்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Updated On : 14 மார்ச், 2026 at 8:23 PM
விரைவு ரயில் - கோப்புப்படம்
பகிர்:

சென்னை சென்ட்ரல் - போடிநாயக்கனூர் விரைவு ரயில் மார்ச் 19 முதல் வாரத்தில் 6 நாள்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தற்போது வாரத்திற்கு 3 நாள்கள் இயக்கப்படும் ரயிலானது இனி சனிக்கிழமை தவிர அனைத்து நாள்களும் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான முன்பதிவு ஏற்கெனவே தொடங்கிவிட்டது.

இந்த ரயில், தென் மாவட்ட மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மதுரை வரை இந்த ரயிலில் வந்து பின்னர் அங்கிருந்து செங்கோட்டை பயணிகள் ரயிலில் தென் மாவட்டங்களுக்குச் செல்லலாம்.

Advertisement

சென்னை - போடிநாயக்கனூர் விரைவு ரயிலானது சென்னை சென்ட்ரலிருந்து இரவு 10.30 மணிக்கு புறப்பட்டு, காட்பாடி, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை, உசிலம்பட்டி, ஆண்டிபட்டி, தேனி வழியாக போடிநாயக்கனூர் சென்றடைகிறது.

summary

Southern Railway has announced that the Chennai Central–Bodinayakkanur Express will operate six days a week starting from March 19.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.