சிறப்பு மனுநீதி நாள் முகாம்
ஆற்காடு வட்டம் கலவையை அடுத்த இருங்கூர், ஆரூர் கிராமங்களுக்கான சிறப்பு மனு நீதி நாள் முகாம் இருங்கூர் கிராமத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
ஆற்காடு வட்டம் கலவையை அடுத்த இருங்கூர், ஆரூர் கிராமங்களுக்கான சிறப்பு மனு நீதி நாள் முகாம் இருங்கூர் கிராமத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
முகாமிற்கு, மாவட்ட வழங்கல் அலுவலர் அப்துல்முனீர் தலைமை வகித்தார். ஆற்காடு வட்டாட்சியர் எஸ்.சரவணன், சமூகப் பாதுகாப்பு வட்டாட்சியர் ரத்னா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், 82 பேருக்கு பட்டா, சிறு விவசாயி சான்று, வாரிசுச் சான்று உள்ளிட்ட பல்வேறு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
இதில், வட்ட வழங்கல் அலுவலர் சுரேஷ், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.