முகப்பு
வேலூர்

விவசாயிகளுக்கு மானிய விலையில் வேளாண் இயந்திரங்கள்: ஆட்சியர் வழங்கினார்

விவசாயிகளுக்கு மானிய விலையில் வேளாண் இயந்திரங்கள் வழங்கும் நிகழ்ச்சி ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 29 ஜனவரி, 2024 at 5:55 PM
பகிர்:

விவசாயிகளுக்கு மானிய விலையில் வேளாண் இயந்திரங்கள் வழங்கும் நிகழ்ச்சி ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, ஆட்சியர் எஸ்.ஏ. ராமன் தலைமை வகித்து, வேளாண் சேவை மையம் அமைக்கும் விவசாயிகள் 3 பேருக்கு ரூ. 78.93 லட்சம் மதிப்பிலான வேளாண் இயந்திரங்களை வழங்கினார். அதில், ரூ. 30 லட்சம் மானியமாகும். தனிநபர் விவசாயிகளுக்கு வழங்கப்படும் மானிய உதவித் திட்டத்தின் கீழ் 4 பேருக்கு ரூ. 14.31 லட்சம் மதிப்பிலான வேளாண் இயந்திரங்கள் வழங்கப்பட்டன. இதில், ரூ. 3.67 லட்சம் மானியமாகும்.
நிகழ்ச்சியில், வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளர் வி.எஸ். ஸ்ரீதர், வேளாண்மை இணை இயக்குநர் வாசுதேவ ரெட்டி, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) சுப்புலட்சுமி, வேளாண்மை பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் எம். பாஸ்கர், பெ.கிருஷ்ணகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →