இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்!
இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகமாவது பற்றி...
இந்திய பங்குச்சந்தைகள் இன்று (மார்ச் 10) உயர்வுடன் வர்த்தகமாகி வருகின்றது.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை தொடக்கத்தில் 425.77 புள்ளிகள் உயர்ந்து 77,991 ஆக வர்த்தகமானது. காலை 10.15 நிலவரப்படி, 77,916.12 புள்ளிகளாக உள்ளது.
இதேபோல், தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 162.65 புள்ளிகள் உயர்ந்து 24,190.70 ஆக வர்த்தகமாகி வருகின்றது.
Advertisement
ஈரான் - அமெரிக்கா, இஸ்ரேல் போர் காரணமாக கடந்த ஒரு வாரமாக இந்திய பங்குச்சந்தைகள் கடும் சரிவைக் கண்டு வந்த நிலையில், விரைவில் போர் முடிவுக்கு வரும் என்று டிரம்ப் திங்கள்கிழமை அறிவித்ததை தொடர்ந்து சரிவிலிருந்து மீண்டுள்ளது.
சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி 50 குறியீடுகளில் டிசிஎஸ், ஐடிசி, எச்சிஎல் டெக், இன்போசிஸ், டெக்எம் உள்ளிட்ட ஐடி நிறுவனங்களின் பங்குகள் சரிவில் வர்த்தகமாகி வருகின்றன.
எச்டிஎஃப்சி வங்கி, ஐசிஐசிஐ, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா ஆகிய வங்கித் துறைகளின் பங்குகள் உயர்வுடன் வர்த்தகமாகி வருகின்றன.