முகப்பு
வேலூர்

முதியவருக்கு ஆயுள் சிறை

உறவினரை கொலை செய்த வழக்கில் முதியவருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருப்பத்தூர் நீதிமன்றம் வியாழக்கிழமை தீர்ப்பளித்தது.

வேலூர்

முதியவருக்கு ஆயுள் சிறை

உறவினரை கொலை செய்த வழக்கில் முதியவருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருப்பத்தூர் நீதிமன்றம் வியாழக்கிழமை தீர்ப்பளித்தது.

Updated On : 29 ஜனவரி, 2024 at 5:55 PM
பகிர்:

உறவினரை கொலை செய்த வழக்கில் முதியவருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருப்பத்தூர் நீதிமன்றம் வியாழக்கிழமை தீர்ப்பளித்தது.
திருப்பத்தூரை அடுத்த குனிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் சம்பத் (55). இவருக்கு ரஜினி, நடராஜன் ஆகிய இரு சகோதரர்களும், லட்சுமி என்ற தங்கையும் உள்ளனர். இவர்களில் சம்பத், ரஜினி, நடராஜன் ஆகிய 3 பேரும் தொழிலாளர்களாக பெங்களூருவில் வேலை செய்து வந்தனர்.
இந்நிலையில், சம்பத்தின் தங்கை மகள் சரளாவுக்கும், ரஜினிக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. திருமணத்துக்குப் பிறகு சம்பத் உள்பட சகோதரர்கள் அனைவரும் பெங்களூரிலேயே வசித்து வந்தனர். அப்போது,  நடராஜன் சரளாவிடம் தவறாக நடக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து சரளா அவரது கணவர் ரஜினியிடம் கூறியும், கண்டு கெள்ளவில்லையாம். இதனால் சரளா கோபித்துக் கொண்டு, தனது தாய் வீட்டிற்கு வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 24.02.2014 அன்று சரளா வீட்டிற்கு வந்த சம்பத், சரளாவை கணவருடன் வாழ அனுப்பி வைக்குமாறு அவரது தந்தை நடராஜனிடம் கூறியுள்ளார். இதற்கு நடராஜன் மறுப்பு தெரிவித்ததால், ஆத்திரமடைந்த சம்பத் கத்தியால் நடராஜனை குத்தினார்.
இதில் பலத்த காயமடைந்த நடராஜன் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே இறந்தார். இதுகுறித்து கந்திலி போலீஸார் வழக்குப் பதிந்து சம்பத்தை கைது செய்தனர்.
இந்த வழக்கு திருப்பத்தூர் 3-ஆவது மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி டி.இந்திராணி, குற்றம்சாட்டப்பட்ட சம்பத்துக்கு ஆயுள் சிறை தண்டனையும், ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதித்து வியாழக்கிழமை தீர்ப்பளித்தார்.

முழு கட்டுரையைப் படிக்க →