யாருடன் கூட்டணி? கட்சி நிர்வாகிகளுடன் ராமதாஸ் முக்கிய ஆலோசனை!
கட்சி நிர்வாகிகளுடன் ராமதாஸ் முக்கிய ஆலோசனை மேற்கொள்வது பற்றி ...
கூட்டணி குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று கட்சி நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனை மேற்கொள்கிறார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் அறிவிக்கப்படவுள்ளதையொட்டி கூட்டணி, தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
பெரும்பாலான கட்சிகள் கூட்டணியை முடிவு செய்துள்ள நிலையில் பாமகவின் ராமதாஸ் இன்னும் முடிவை அறிவிக்கவில்லை.
Advertisement
Advertisement
அதிமுக- பாஜக கூட்டணியில் அவரது மகன் அன்புமணி இணைந்துள்ளதால், திமுக அல்லது தவெகவுடன் ராமதாஸ் கூட்டணி வைக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி இருக்கும் என்று ராமதாஸ் ஒருமுறை கூறியிருந்தார்.
இந்நிலையில் கூட்டணி தொடர்பாக தைலாபுரத்தில் ராமதாஸ் இன்று கட்சி நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனை மேற்கொள்கிறார். கூட்டணி குறித்து அவர் இன்று அறிவிப்பு வெளியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
PMK founder Ramadoss discussion with party executives on alliance
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.