முகப்பு
வேலூர்

மெட்ரிக். பள்ளியில் அறிவியல் கண்காட்சி

வாணியம்பாடி ஆதர்ஷ் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட அளவிலான "வீட்டுக்கொரு விஞ்ஞானி' என்ற அறிவியல் கண்காட்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Updated On : 29 ஜனவரி, 2024 at 5:55 PM
பகிர்:

வாணியம்பாடி ஆதர்ஷ் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட அளவிலான "வீட்டுக்கொரு விஞ்ஞானி' என்ற அறிவியல் கண்காட்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இப்பள்ளியுடன் தனியார் தொலைக்காட்சி இணைந்து நடத்திய நிகழ்ச்சிக்கு, பள்ளியின் தாளாளர் செந்தில்குமார் தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் பிங்கிரூஹீத் வரவேற்றார். மாவட்டக் கல்வி அலுவலர் சாந்தசிவம் கண்காட்சியைத் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
இதில், மாவட்டத்தில் இருந்து பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டு தங்களுடைய அறிவியல் படைப்புகளை காட்சிப்படுத்தி, அதன் விளக்கங்களை நடுவர்கள் முன்னிலையில் எடுத்துரைத்தனர். இதில், சிறந்த படைப்புகளுக்கு பரிசு மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன. பள்ளியின் நிர்வாக அலுவலர் கவிதா நன்றி கூறினார்.

முழு கட்டுரையைப் படிக்க →