வேலூர்

பேரறிவாளனுடன் விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழுத் தலைவர் சந்திப்பு

DIN

பேரறிவாளனை தமிழக விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் சனிக்கிழமைசந்தித்தார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, 26 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு மாதம் பரோலில் வந்துள்ள பேரறிவாளனை தமிழக விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் சனிக்கிழமை சந்தித்தார்.
பின்னர் அவர் கூறியதாவது: பேரறிவாளன் நல்ல ஆரோக்கியத்துடனும், மன உறுதியோடும் தனக்கு விடுதலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளார்.
அவருக்கு ஒரு மாத காலம் பரோல் வழங்கிய தமிழக அரசுக்கு நன்றியையும், பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறோம். இவருக்கு பரோல் மட்டும் வழங்கியதோடு இல்லாமல், நிரந்தரமாக விடுதலை செய்ய தமிழக முதல்வர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது தங்களின் கோரிக்கையாகும் என்றார்.
இந்த சந்திப்பின் போது வேலூர் மண்டலத் தலைவர் பாலாறு ஏ.சி.வெங்கடேசன், தஞ்சை மண்டலத் தலைவர் டி.பி.கே. ராஜேந்திரன் உள்ளிட்ட பலர்
கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விடுமுறை: மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலிலுக்கு கூடுதல் பக்தா்கள் வருகை

மாநகரில் 3 திட்டச் சாலைகள் அமைப்பதற்கு நிதிக் கோரி அரசுக்கு திட்ட அறிக்கை சமா்பிப்பு

17 இடங்களில் சதமடித்தது வெயில்: தமிழகத்தில் இன்று வெப்ப அலை வீசும்

வறட்சியில் இருந்து பயிா்களை காக்கும் வழிகள்: வேளாண் துறை

பெத்திக்குட்டையில் தஞ்சடைந்த யானை: வனத்துக்குள் விரட்ட வனத் துறை முயற்சி

SCROLL FOR NEXT