வேலூர்

செம்மரக் கடத்தல்காரரிடம் சிபிசிஐடி போலீஸார் தீவிர விசாரணை

DIN

செம்மரக் கடத்தல்காரர் அமித்கானிடம் சிபிசிஐடி போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர்.
செம்மரக் கடத்தல் வழக்கில் தலைமறைவாக இருந்த அமீத்கானை சிபிசிஐடி போலீஸார் பெங்களூரு விமான நிலையத்தில் நவ.29-ஆம் தேதி கைது செய்தனர். 
அவரை வேலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பிறகு, வேலூர் மத்திய சிறைக்கு அனுப்பினர். அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த அனுமதி கோரி, வேலூர் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை ஆஜர்படுத்தப்பட்டார். 
இதையடுத்து, 4 நாள் காவலில் விசாரணை நடத்த நீதிபதி அனுமதி வழங்கினார். சிபிசிஐடி போலீஸார் அவரை அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.  
கடத்திச் செல்லப்பட்ட 162 செம்மரக் கட்டைகள் யாருக்கு விற்பனை செய்யப்பட்டது. இதில், இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் யார் யார் என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவாலை சந்தித்த சுனிதா, அதிஷி!

அதிகரிக்கும் தொண்டை வலி, இருமலுடன் காய்ச்சல்: சீசன் நோயாக மாறியதா கரோனா?

பாலியல் புகாரில் சிக்கியவர்கள் மீது நடவடிக்கை: எச்டி குமாரசாமி உறுதி

அஜித் படத்தில் சிம்ரன், மீனா?

மரத்தில் கார் மோதி விபத்து: தாயுடன் மகன் பலி

SCROLL FOR NEXT