முகப்பு
வேலூர்

கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம்

ஆற்காடு சித்தீஸ்வரர் பாலிடெக்னிக் கல்லூரியில்  டி.வி.எஸ். குருப்ஸ் மற்றும் நிறுவனங்கள் சார்பில் வளாகத் தேர்வு வேலைவாய்ப்பு முகாம் கடந்த 23 முதல் 31-ஆம் தேதி வரை நடைபெற்றது.

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:10 PM
பகிர்:

ஆற்காடு சித்தீஸ்வரர் பாலிடெக்னிக் கல்லூரியில்  டி.வி.எஸ். குருப்ஸ் மற்றும் நிறுவனங்கள் சார்பில் வளாகத் தேர்வு வேலைவாய்ப்பு முகாம் கடந்த 23 முதல் 31-ஆம் தேதி வரை நடைபெற்றது.
முகாமை, கல்லூரிப் பொருளாளர் பி.பாலகிருஷ்ணன், தலைவர் கே.குப்புசாமி ஆகியோர் தொடங்கி வைத்தனர். இயந்திரவியல் மற்றும் மின்னியல் பிரிவைச் சேர்ந்த 110 மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் 68 பேர் தேர்வு செய்யப்பட்டனர். 
தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு  நிரந்தர பணி மற்றும் குறைந்தபட்ச ஊதியம் ரூ. 12 ஆயிரம் வழங்கப்படும் என நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இம்முகாமில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களை சித்தீஸ்வரர் கல்வி அறக்கட்டளைச் செயலாளர் ஜி.செல்வகுமார், தாளாளர் டி.தரணிபதி மற்றும் இயக்குநர்கள் எம்.சங்கர், எஸ். ஆதிகேசவன், டி. பச்சையப்பன், கே.கிருபானந்தன், வி.உமாசங்கர் ஆகியோர் பாராட்டி வாழ்த்தினர்.
 
முழு கட்டுரையைப் படிக்க →