காதல் ஜோடி விஷமருந்தி தற்கொலை
திருப்பத்தூர் அருகே திருமணம் நிச்சயித்த பெண்ணும், அவரது காதலரும் புதன்கிழமை விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டனர்.
திருப்பத்தூர் அருகே திருமணம் நிச்சயித்த பெண்ணும், அவரது காதலரும் புதன்கிழமை விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டனர்.
திருப்பத்தூரை அடுத்த மேல்அச்சமங்கலம் பகுதியைச் சேர்ந்த ராமனின் மகள் பாரதி (20). கீழ் அச்சமங்கலம் பகுதியைச் சேர்ந்த நடராஜின் மகன் கார்த்திக் (21). இவர், ஊத்தங்கரையில் உள்ள தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். இருவரும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. பாரதிக்கு வேறு ஒருவருடன் பிப்ரவரி 26-ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது.
இந்நிலையில், புதன்கிழமை பாரதி தனது வீட்டில் விஷமருந்தினார். அதேபோல் கார்த்திக்கும் தனது வீட்டில் விஷமருந்தினார். இதையடுத்து இருவரும் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு இருவரும் இறந்தனர். இதையடுத்து பாரதியின் சடலம் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. கார்த்திக்கின் சடலம் வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதுகுறித்து ஜோலார்பேட்டை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.