முகப்பு
வேலூர்

பள்ளிப் பேருந்து  மோதியதில் ஒருவர் சாவு

ஆம்பூர் அருகே தனியார் பள்ளிப் பேருந்து மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.   

Updated On : 10 ஜூலை, 2018 at 12:56 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 9:40 PM

ஆம்பூர் அருகே தனியார் பள்ளிப் பேருந்து மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.   
மாதனூர் அருகே சின்னபள்ளிகுப்பம் கிராமத்தை சேர்ந்த குமார் (45) மற்றும் அவரது நண்பர்கள் ஆறுமுகம் (40), குபேந்திரன் ஆகியோர் இரு சக்கர வாகனத்தில் ஆம்பூர் நோக்கி வந்தனர்.  
அப்போது பின்னால் வந்த தனியார் பள்ளிப் பேருந்து மோதியதில், குமார் சம்பவ இடத்திலேயே இறந்தார். ஆறுமுகம், குபேந்திரன் ஆகியோர் காயமடைந்தனர்.  
அவர்கள் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். 
இதுகுறித்து  ஆம்பூர் கிராமிய போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.