முகப்பு
வேலூர்

பாலாற்று மணல் கொள்ளையைக் கண்டித்து தேமுதிகவினர் ஆர்ப்பாட்டம்

பாலாற்று மணல் மற்றும் கனிம வளக் கொள்ளையை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி, அதனைக் கண்டித்து

Updated On : 10 ஜூலை, 2018 at 12:55 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 9:40 PM

பாலாற்று மணல் மற்றும் கனிம வளக் கொள்ளையை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி, அதனைக் கண்டித்து  தேமுதிகவினர்  வாலாஜாபேட்டை வட்டாட்சியர் அலுவலகம்  முன்பு திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  ஆர்ப்பாட்டத்தில், பூண்டி, திருப்பாற்கடல், வன்னிவேடு, அனந்தலை, நந்தியாலம், ஆயிலம் உள்ளிட்ட பாலாற்றுப் படுகைகளில்   மணல் மற்றும் கனிம வளக் கொள்ளையைத் தடுக்க வேண்டும், பாலாற்றில் கலக்கும் 
ரசாயனக்  கழிவு நீரை  தடுத்து  நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், வரி உயர்வு மற்றும் நிர்வாகச் சீர்கேடுகளைக் களைய  வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி  கோஷங்கள் எழுப்பப்பட்டன.
ஆர்ப்பாட்டத்தில் திரளான தேமுதிகவினர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.