பைக் மோதி கூலித் தொழிலாளி சாவு
அரக்கோணம் அருகே சாலையில் நடந்து சென்றவர் மீது பைக் மோதியதில் படுகாயமடைந்த கூலித்தொழிலாளி மருத்துவமனைக்கு
அரக்கோணம் அருகே சாலையில் நடந்து சென்றவர் மீது பைக் மோதியதில் படுகாயமடைந்த கூலித்தொழிலாளி மருத்துவமனைக்கு கொண்டு வரும் வழியில் இறந்தார். பைக்கில் பயணித்தவரும் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அரக்கோணத்தை அடுத்த சித்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னப்பன்(50). கூலித்தொழிலாளி. அவர் வெள்ளிக்கிழமை மாலை, தனது கிராமத்துக்கு அருகே சாலையில் நடந்து சென்றார்.
அப்போது அவ்வழியே பைக்கில் வந்த முருங்கை கிராமத்தைச் சேர்ந்த வேலு(32), சின்னப்பன் மீது மோதியதில் இருவரும் பலத்த காயமடைந்தனர். இருவரும் அரக்கோணம் அரசினர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டகனர். அவர்களில் சின்னப்பன்(50) மருத்துவமனைகு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். வேலு தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் தொடர்பாக தக்கோலம் போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.