முகப்பு
வேலூர்

மரம் வளர்ப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு ஊர்வலம்

மரம் வளர்ப்பை வலியுறுத்தி ஆம்பூர் தக்ஷிலா குளோபல் பள்ளி சார்பாக விழிப்புணர்வு ஊர்வலம் சனிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 10 ஜூலை, 2018 at 12:53 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 9:40 PM

மரம் வளர்ப்பை வலியுறுத்தி ஆம்பூர் தக்ஷிலா குளோபல் பள்ளி சார்பாக விழிப்புணர்வு ஊர்வலம் சனிக்கிழமை நடைபெற்றது.
பள்ளியின் இயக்குநர் பிரியங்கா சிங்வி தலைமை வகித்து விழிப்புணர்வு ஊர்வலத்தைத் தொடங்கி வைத்தார். பள்ளியிலிருந்து புறப்பட்ட ஊர்வலம் நகரின் முக்கிய சாலைகள் வழியாகச் சென்றன. நகரின் முக்கிய பகுதியில் சாலையோரம் மரக்கன்றுகள் நடப்பட்டன. ஊர்வலம் பள்ளியில் நிறைவடைந்தது. பள்ளி முதல்வர் லஷ்மி சரவணன், நிர்வாக அலுவலர் பத்மநாபன் ஆகியோர் ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.