வேலூர்

அணைக்கட்டு வட்டார வளர்ச்சி அலுவலக ஓட்டுநர் மர்மச் சாவு

DIN

அணைக்கட்டு வட்டார வளர்ச்சி அலுவலக ஓட்டுநர் ஞாயிற்றுக்கிழமை மர்மமான முறையில் இறந்து கிடந்தார். 
வேலூர் பலவன்சாத்துகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜன் (40). இவர், அணைக்கட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணியாற்றி வந்தார். இவருக்கு பகவதி என்ற மனைவியும், ஒரு மகன், மகள் உள்ளனர். சனிக்கிழமை மாலை வீட்டிலிருந்து வெளியே வந்த நாகராஜன், ஞாயிற்றுக்கிழமை காலை எழில் நகர் பகுதியில் மாட்டு வண்டியின் கீழே உடலில் காயங்களுடன் இறந்து கிடந்தார்.
தகவலறிந்த பாகாயம் போலீஸார் அங்கு சென்று சடலத்தைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். 
இதில், மதுப்பழக்கம் உள்ள நாகராஜன், சனிக்கிழமை மாலை வீட்டிலிருந்து வந்த போது ரூ. 4 ஆயிரம் பணமும், செல்லிடப்பேசியையும் எடுத்து வந்தது தெரியவந்தது. ஆனால், நாகராஜன் இறந்து கிடந்த இடத்தில் பணமும், செல்லிடப்பேசியும் மாயமாகியிருந்ததது தெரியவந்தது.
இதையடுத்து சடலத்தை பிரேதப் பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிய போலீஸார், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேட்டுப்பாளையத்தில் மான் இறைச்சி எடுத்துச்செல்ல முயன்ற 6 போ் கைது

நகைத் திருடிய 2 பெண்கள் மீது வழக்குப் பதிவு

செஸ் வீரா் குகேஷுக்கு கனரா வங்கி பாராட்டு

வெப்ப அலைக்கு இளைஞா் உயிரிழந்த விவகாரம்- நேரடி வெயிலில் பணியாற்ற கூடாது: மருத்துவா்கள் அறிவுறுத்தல்

மாநகரில் மேலும் 7 சிக்னல்களில் தற்காலிகப் பந்தல்

SCROLL FOR NEXT