வேலூர்

தன்வந்திரி பீடத்தில் பவித்ரோற்சவம் தொடக்கம்

DIN


வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் திங்கள்கிழமை பவித்ரோற்சவம் தொடங்கியது.
இதையொட்டி, ஆரோக்ய லக்ஷ்மி சமேத தன்வந்திரி பெருமாளுக்கும், இதர பரிவார மூர்த்திகளுக்கும் கோ பூஜை, யாக சாலை பூஜை, ஸ்ரீ சுதர்சன மகா ஹோமம் ஆகியவை திங்கள்கிழமை காலை நடைபெற்றன. மாலையில், வாஸ்து சாந்தி ஹோமம், உற்சவர் தன்வந்திரி பவித்ர மண்டபம் எழுந்தருளுதல், மகா சங்கல்பத்துடன் பவித்ரோற்சவம் தொடங்கியது.
செவ்வாய்க்கிழமை (நவம்பர் 13) வேதபாராயணம், சகல தேவதா திருமஞ்சனம், தன்வந்திரி பெருமாள், ஆரோக்ய லக்ஷ்மி விசேஷ அலங்காரம், அர்ச்சனை, தன்வந்திரி உற்ஸவமூர்த்தி திருமஞ்சனம், பவித்ர ஹோமம், சஹஸ்ர நாம அர்ச்சனை உள்ளிட்டவை நடைபெற உள்ளதாக பீடாதிபதி முரளிதர சுவாமிகள் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாடலீஸ்வரா் கோயில் குளத்தில் இறந்து மிதக்கும் மீன்கள்

மேலிருப்பு முத்தாலம்மன் கோயில் திருவிழா நடத்தத் தடை

வாகனங்கள் மீதான இ - செலான் அபராதம்: சிறப்பு லோக் அதாலத் நடத்தக் கோரிக்கை

ஏரியில் மூழ்கிய இளைஞா் சடலமாக மீட்பு

தேசிய மாணவா் படை ஆண்டு முகாம் தொடக்கம்

SCROLL FOR NEXT