வேலூர்

பாலாற்றின் குறுக்கே ஆந்திரம் மேலும் தடுப்பணைகளை கட்ட விடக் கூடாது

DIN

பாலாற்றின் குறுக்கே ஆந்திரம் மேலும் 21 தடுப்பணைகளைக் கட்டினால் தமிழகத்துக்கு ஒரு சொட்டு  தண்ணீர்கூட கிடைக்காது. இந்தத் தடுப்பணைகள் கட்டும் நடவடிக்கையை மத்திய, மாநில அரசுகள் தடுத்து நிறுத்த வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
வேலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 
இதில் விவசாயிகள் பேசியதாவது: பாலாற்றின் குறுக்கே ஏற்கெனவே ஆந்திர அரசு 22 தடுப்பணைகள் கட்டியுள்ளன. தற்போது மேலும் 21 தடுப்பணைகள் கட்ட ரூ. 41 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக அறிகிறோம். அவ்வாறு மேலும் தடுப்பணைகள் கட்டப்பட்டால் வேலூர் மாவட்டத்துக்கு ஒரு சொட்டு தண்ணீர்கூட கிடைக்காது. மத்திய, மாநில அரசுகள் தடுப்பணைகள் கட்டுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும். 
நெல் மூட்டைகளை டிராக்டரில் ஏற்றிச்செல்லும்  போது காவேரிபாக்கம்-ஓச்சேரி சாலையில் போலீஸார் மடக்கிப் பிடித்து வசூல்வேட்டை நடத்துகின்றனர்.
இதேபோல், வேப்பங்குப்பம் பகுதியில் வாழைக்காய்களை ஏற்றிச் செல்லும்போதும் போலீஸார் வசூல்வேட்டையில்  ஈடுபடுகின்றனர். இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகம் விசாரணை நடத்த வேண்டும். 
கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் மின்இணைப்புக் கேட்டு விண்ணப்பித்து வரும் விவசாயிகளுக்கு இதுவரை மின் இணைப்பு வழங்கப்படவில்லை. விரைவில் இலவச மின்சாரத்தைக் கண்காணிக்க மின் மீட்டர் பொருத்த உள்ளதாகக் கூறுகின்றனர். 
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறோம். பன்றிகளை சுட்டுக்கொல்ல வனத்துறை மீண்டும் அனுமதி தர வேண்டும். அப்போதுதான் பயிர்களை காப்பாற்ற முடியும். 
மேல்அரசம்பட்டு, ஒடுகத்தூர் சாலைகளில் சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் வரை மட்டுமே அகலப்படுத்தினர். பின்னர், பாதியில் விட்டுவிட்டனர். இதனால், விபத்துகள் ஏற்படுகின்றன. 
ஆண்டியப்பனூர் தடுப்பணையில் கால்வாய்களைத் தூர்வார வேண்டும். வேலூர் மாவட்டத்தில் குறைந்த அளவே மழை பெய்து வருவதால் நவதானியங்களான காராமணி, உளுந்து, துவரை, சோளம் போன்ற விதைகள் தரமானதாக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கலவை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்துக்கு அருகிலேயே தனியார் விற்பனைக் கூடம் அமைந்துள்ளது. இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் உடந்தையாக உள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
இக்கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார். 
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெ.பார்த்திபன், வேளாண்மை இணை இயக்குநர் சுப்புலட்சுமி, கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் ராஜ்குமார், மத்திய கூட்டுறவு வங்கி நிர்வாக இயக்குநர் ஜெயா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லண்டனில் பலரை வெட்டிய இளைஞர் கைது!

பறக்கும் முத்தத்தால் வந்த வினை; கேகேஆர் வீரருக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை!

ஹமாஸ் அழிக்கப்படும் வரை போர் தொடரும்: நெதன்யாகு சூளுரை!

ஏற்காட்டில் பேருந்து விபத்து : 4 பேர் பலி

கண்ணெதிரே 3 ஐசிசி கோப்பைகள்; பாகிஸ்தான் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டனின் இலக்கு என்ன?

SCROLL FOR NEXT