வேலூர்

அரக்கோணம் ரயில் நிலையத்தை மேலும் மேம்படுத்துவேன்: திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன்

அரக்கோணம் ரயில் நிலையத்தை மேலும் மேம்படுத்துவேன் என்று திமுக வேட்பாளர் எஸ்.ஜெகத்ரட்சகன் கூறினார்.

DIN

அரக்கோணம் ரயில் நிலையத்தை மேலும் மேம்படுத்துவேன் என்று திமுக வேட்பாளர் எஸ்.ஜெகத்ரட்சகன் கூறினார்.
அரக்கோணம் நகரில் காந்தி சாலையில் அவர் ஞாயிற்றுக்கிழமை பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியது:
அரக்கோணம் ரயில் நிலையத்தில் பல்வேறு பணிகள் மேலும் நடைபெற வேண்டியுள்ளன. தெற்கு ரயில்வேயின் முக்கிய சந்திப்பாக, மாதிரி ரயில் நிலையமாக அரக்கோணத்தை மாற்றும் பணியை விரைவாக நடக்கச் செய்வேன். 
இந்த ரயில் நிலையத்தை மேலும் மேம்படுத்துவேன். அரக்கோணம் தொகுதியில் வேலையில்லாத் திண்டாட்டத்தை குறைக்க பல்வேறு தொழிற்சாலைகளைக் கொண்டுவர வேண்டும். அரக்கோணத்தில் இருந்து சென்னைக்கு பணிக்குத் செல்வோரின் பயணத்தை எளிதாக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார் எஸ்.ஜெகத்ரட்சகன். 
பிரசாரத்தின்போது அவருடன் திமுக வேலூர் மாவட்டச் செயலாளரும் ராணிப்பேட்டை எம்எல்ஏவுமான காந்தி, மாவட்டப் பொருளாளர் மு.கன்னைய்யன், மாவட்ட துணை செயலர் ராஜ்குமார், நகர பொறுப்பாளர் வி.எல்.ஜோதி, காங்கிரஸ் நகர தலைவர் துரைசீனிவாசன், மாநில கமிட்டி உறுப்பினர் ராஜ்குமார், மாவட்ட துணைத் தலைவர் கோபண்ணாரவி, நகர பொருளாளர் லவக்குமார், ஒன்றியத் தலைவர் மு.உலகநாதன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலர் கெளதமன், மாநில இளைஞர் அணி துணை அமைப்பாளர் ந.தமிழ்மாறன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிர்வாகி சுதாகர், மனித நேய மக்கள் கட்சி நிர்வாகி முகமது அலி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓடிடியில் ரஷ்மிகா மந்தனாவின் தம்மா!

தொடர்கதையாகும் வெடிகுண்டு மிரட்டல்: இன்று நாக்பூர், பாந்த்ரா நீதிமன்றத்திற்கு!

அடுத்தடுத்து வெளியாகும் நிவின் பாலியின் இணையத் தொடர், திரைப்படம்!

புதிய வரலாறு படைத்த டாம் லாதம் - டெவான் கான்வே!

தீய சக்தி திமுக; தூய சக்தி தவெக! விஜய்

SCROLL FOR NEXT