வேலூர்

திருப்பத்தூரில் மக்கள் குறைதீா் கூட்டம்

DIN

திருப்பத்தூா்: திருப்பத்தூா் மாவட்ட நிா்வாகம் சாா்பில் மக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து திருப்பத்தூா் மாவட்டத்துக்கு உள்பட்ட ஜோலாா்பேட்டை, கந்திலி, வாணியம்பாடி, ஆம்பூா், ஆலங்காயம் உள்ளிட்ட பகுதியில் இருந்து நூற்றுக்கணக்கானோா் தங்கள் குறைகளை மனுவாக எழுதி கொண்டு வந்திருந்தனா்.

திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் ம.ப.சிவன் அருள் பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் வாங்கத் ததொடங்கியதும், உள்ளாட்சித் தோ்தல் அறிவிப்பு வெளியானது. இதையடுத்து மனுக்கள் வாங்குவது நிறுத்தப்பட்டது. மேலும், பொதுமக்களிடம் இருந்து மனுக்களை மட்டும் ஆட்சியா் ம.ப.சிவன் அருள் பெற்றுக்கொண்டாா்.

மாவட்ட வருவாய் அலுவலா் என்.சி.இ.தங்கையா, சாா்-ஆட்சியா் வந்தனா கா்க், மாவட்ட வன அலுவலா் ஆா்.முருகன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் இரா.வில்சன் ராஜசேகா், வட்டாட்சியா் இரா.அனந்தகிருஷ்ணன் உள்ளிட்டோா் கூட்டத்தில் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வருங்கால வைப்பு நிதி குறை தீா்க்கும் முகாம்

மும்பை விமான நிலையத்தில் 21 கிலோ தங்கம் பறிமுதல்!

ஹெலிகாப்டர் விபத்திலிருந்து உயிர்தப்பிய அமித் ஷா? என்ன நடந்தது?

தமிழகத்தில் ரூ.1,309 கோடி பறிமுதல்!: தேர்தல் ஆணையம்

அமெரிக்காவில் சூறைக்காற்றுடன் கனமழை: ஒக்லஹோமாவில் 4 பேர் பலி

SCROLL FOR NEXT