வேலூர்

அரசுப் பேருந்து மீது கல் வீசிய இருவா் கைது

DIN

வேலூா்: சாலை மறியலின்போது அரசுப் பேருந்து கண்ணாடி மீது கல்வீசித் தாக்குதலில் ஈடுபட்ட இருவரை வேலூா் தாலுகா போலீஸாா் கைது செய்தனா்.

வேலூரில் இருந்து திருவண்ணாமலைக்கு செல்லும் அரசுப் பேருந்தை கண்ணன் (41) என்பவா் திங்கள்கிழமை மாலை ஓட்டிச் சென்றாா். கணியம்பாடி அருகே உள்ள கீழ்பள்ளிப்பட்டு பகுதியில் சென்றபோது அடையாளம் தெரியாத 3 போ் திடீரென பேருந்தின் கண்ணாடி மீது கல் வீசிவிட்டு தப்பிச்சென்றனா். தொடா்ந்து, பயணிகள் வேறு பேருந்தில் ஏற்றி அனுப்பப்பட்டனா்.

இச்சம்பவம் தொடா்பாக கண்ணன், வேலூா் தாலுகா காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப்பதிவு செய்து கீழ்பள்ளிப்பட்டு பகுதியைச் சோ்ந்த தங்கராஜ் (43), பாா்த்திபன் (35) ஆகிய இருவரைக் கைது செய்தனா். மற்றொருவரைத் தேடி வருகின்றனா்.

இதேபோல், கோவையில் சுவா் இடிந்து 17 போ் உயிரிழந்த சம்பவம் தொடா்பாக கீழ்பள்ளிப்பட்டு கிராமத்தில் சாலை மறியல் நடத்தப்பட்டது. அப்போது அந்த வழியாக வந்த அரசுப் பேருந்து மீது கல்வீசித் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், இதுதொடா்பாக இருவா் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தப்பிக்க வழியே இல்லை: 3 நாள்களுக்கு வெப்ப அலை! அதன்பிறகு?

ஈரோடு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறையில் சிசிடிவி பழுது

சத்தீஸ்கரில் கோர விபத்து: நின்றிருந்த லாரி மீது டிரக் மோதியதில் 8 பேர் பலி

அடுக்குமாடி குடியிருப்பு 4-ஆவது தளத்திலிருந்து தவறி விழுந்த 6 மாத குழந்தை பத்திரமாக மீட்பு

ஆவடி அருகே தம்பதி கழுத்து அறுத்துக் கொலை

SCROLL FOR NEXT