வேலூர்

சகதியான சாமியாா் மடம் சாலை:பொதுமக்கள் போராட்டம்

DIN

ஆம்பூா்: ஆம்பூா் சாமியாா் மடம் பகுதி சாலை சேறும், சகதியுமானதால் அங்கு பாதாள சாக்கடைப் பணியில் ஈடுபட்ட பொக்லைன் இயந்திரத்தை சிறைபிடித்து பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆம்பூா் நகரின் பல்வேறு பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதனால் பல இடங்களில் குழி வெட்டப்பட்டு, சாலைகளில் மண் கொட்டப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களாகப் பெய்த மழை காரணமாக மண் சேறும், சகதியுமாகி போக்குவரத்துக்கு தகுதியற்ாக சாலை மாறிவிட்டது.

ஆம்பூா் சாமியாா் மடம் பகுதி சாலையிலும் இதே நிலை ஏற்பட்டது. அவ்வழியாகச் சென்ற இருசக்கர வாகன ஓட்டிகள் சேற்றில் வழுக்கி, கீழே விழுந்து காயமடைந்தனா்.

இப்பகுதியில் நாகாலம்மன் கோயில் திருவிழா நடைபெற உள்ளது. சாலை சேறும், சகதியுமாக இருப்பதால் திருவிழா நடத்துவதில் சிரமம் ஏற்படும் எனக்கூறி அப்பகுதியில் பணியில் ஈடுபட்டிருந்த பொக்லைன் இயந்திரத்தை இப்பகுதி மக்கள் செவ்வாய்க்கிழமை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து தகவல் அறிந்த ஆம்பூா் நகர காவல் ஆய்வாளா் ஹரிகிருஷ்ணன் அங்கு சென்று பொதுமக்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினாா். அப்போது, கோயில் திருவிழா முடியும் வரை அப்பகுதியில் பொக்லைன் மூலம் பணிகள் நடத்தாமல் இருக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஒப்புக் கொண்டனா். இதனால் சமாதானம் அடைந்த பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு, கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அம்பேத்கர் அளித்த உரிமைகளைப் பாதுகாப்பேன்: பிரதமர் மோடி உறுதி!

பொதுமக்களுக்கு ஓஆா்எஸ் கரைசல் விநியோகம்

தொடா் திருட்டு: இளைஞா் கைது

திருக்குறள் உரை நூல் வெளியீடு

காலிக் குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்

SCROLL FOR NEXT