வேலூர்

பெண்ணிடம் நூதன முறையில்  9 சவரன் நகை கொள்ளை

DIN

ஜோலார்பேட்டையில் பெண்ணிடம் மயக்கப் பொடி தூவி 9 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். 
ஜோலார்பேட்டையை அடுத்த மேட்டுசக்கரகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் சந்திரசேகரின் மனைவி ராதம்மாள் (55). இவர், புதன்கிழமை வாணியம்பாடி-திருப்பத்தூர் நெடுஞ்சாலையில் சந்தைகோடியூர் பகுதியில் நடைப்பயிற்சி சென்றார். 
அப்போது சாலையோரத்தில் நின்ற 30 வயது மதிக்கத்தக்க பெண் மயக்கப் பொடி தூவினார். இதில் மயக்கமடைந்த ராதம்மாளிடம் இருந்த 9 சவரன் நகையைப் பறித்துச் சென்றார்.  இதுகுறித்து ஜோலார்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 5 ஆண்டுகளில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ அமல்படுத்தப்படும்: ராஜ்நாத் சிங்

நிறைவடைந்தது நீட் தேர்வு!

யாரோ இவள்..!

செயில் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிப்பது எப்படி?

பஞ்சாப் கிங்ஸுக்கு 168 ரன்கள் இலக்கு நிர்ணயித்த சிஎஸ்கே!

SCROLL FOR NEXT