வேலூர்

மேல்பாடி அருகே பிடிபட்ட 12 அடி நீள மலைப் பாம்பு

DIN


மேல்பாடி அருகே இரவு நேரத்தில் குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்த 12 அடி நீள மலைப் பாம்பு ஒன்றை கிராம மக்கள் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
ராணிப்பேட்டையை அடுத்த மேல்பாடி அருகே உள்ள சிவபுரம் கிராம குடியிருப்புப் பகுதிக்குள் வெள்ளிக்கிழமை இரவு சுமார் 8 மணியளவில் 12 அடி நீளமுள்ள மலைப் பாம்பு ஒன்று ஊர்ந்து வந்துள்ளது. 
இதைக் கண்ட அக்கிராம மக்கள் பீதியடைந்தனர். உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் அந்த மலைப் பாம்பு இருட்டில் வீடுகளுக்குள் புகுந்து வீடாமல் தடுத்து லாவகமாகப் பிடித்தனர். அதைத் தொடர்ந்து அங்கு விரைந்து வந்த வனத்துறை ஊழியர் சுப்பிரமணியிடம் ஒப்படைத்தனர். 
சிவபுரம் கிராமத்தில் இது வரை இவ்வளவு பெரிய மலைப் பாம்பு வந்ததில்லை. இந்த கிராமத்துக்கு போதிய மின் விளக்கு வசதி இல்லாததால் அச்சத்துடனே வசித்துவருகிறோம், மாவட்ட நிர்வாகம் உடனடியாக மின்விளக்கு வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் ' என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிகா் தினம்: தமிழகத்தில் இன்று கடைகள் இயங்காது

அந்நியச் செலாவணி கையிருப்பு 63,792 கோடி டாலராகக் குறைவு

கோடை வெயில் தாக்கம் அதிகரிப்பு: வேளாங்கண்ணியில் பக்தா்களுக்கு சிறப்பு வசதிகள்

தமிழகத்தில் மூன்று ஆண்டுகளில் 6,115 புத்தாக்கத் தொழில்கள் தொடக்கம்

மக்களவைத் தோ்தல்: லடாக் தொகுதியில் 5 போ் போட்டி

SCROLL FOR NEXT