வேலூர்

"நீதிமன்றத் தீர்ப்பை அதிகாரத்தில் உள்ளவர்கள் மதிக்க வேண்டும்

DIN

'நீதிமன்றத் தீர்ப்பை அதிகாரத்தில் உள்ளவர்கள் மதிக்க வேண்டும் என்று பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து தினமணி செய்தியாளரிடம் அவர் கூறியது: 
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனைக் கைதிகளான  பேரறிவாளன், முருகன், நளினி, சாந்தன் உள்ளிட்ட 7 பேரையும் அரசியலமைப்புச் சட்டம் 161-அவது பிரிவின்கீழ் விடுதலை செய்வது தொடர்பாக தமிழக அரசு முடிவெடுத்து, அதை மாநில ஆளுநரிடம் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கலாம் என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். 
அதைத் தொடர்ந்து மாநில அரசும் ஆளுநரிடம் விடுதலை தொடர்பான கோப்புகளை பரிசீலனைக்கு அனுப்பி வைத்ததாகத் தெரிவித்தனர். கடந்த 9 மாதங்களாக ஆளுநர் கையொப்பத்துக்காக காத்திருக்கிறோம். ஆனால், ஆளுநர் அலுவலகத்திடம் இருந்து எந்த அறிக்கையும் இதுவரை வரவில்லை. நீதிமன்றத் தீர்ப்பை அதிகாரத்தில் உள்ளவர்கள் மதிக்க வேண்டும். 
எனது மகன் பேரறிவாளனை கடந்த 1991-ஆம் ஆண்டு ஜூன் 6-ஆம் தேதி சிறிய விசாரணை என்ற பெயரில் சிபிஐ அழைத்துச் சென்றது. 28 ஆண்டுகள் ஆகிறது. நானும் முதுமையில் தவித்து வருகின்றேன். பேரறிவாளனின் இளமைப் பருவம் சிறையிலேயே கழிந்தது.
இதைக் கருத்தில் கொண்டு, தமிழக அரசு பேரறிவாளன் உள்பட 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மல்யுத்த போட்டிகளில் பங்கேற்க தடை -பஜ்ரங் புனியா விளக்கம்

கர்நாடகத்தில் 20 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெறும்: சித்தராமையா நம்பிக்கை

கோபால் கிருஷ்ண கோஸ்வாமி மறைவு: மோடி இரங்கல்!

புதிய நம்பிக்கை.. வின்சி அலோஷியஸ்!

முகமது சிராஜுக்கு சுநீல் காவஸ்கர் புகழாரம்!

SCROLL FOR NEXT