வேலூர்

தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி: ஆட்சியர் தொடங்கி வைத்தார்

DIN

ஏலகிரி அரங்கில் மகளிர் சுய உதவிக் குழுப் பெண்களுக்கு தேர்தல் விழிப்புணர்வு அடங்கிய வாழ்த்து மற்றும் செய்தி மடல் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 
நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்து ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் பேசியதாவது: 
ஜனநாயகத்தின் முக்கிய பணி தேர்தலில் வாக்களிப்பது. இது நமது கடமையும் உரிமையுமாகும். இதை நிறைவேற்ற அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும். வேலூர் மாவட்டத்தில் 100 சதவீத வாக்குப்பதிவு பெறும் வகையில் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
மகளிர் சுய உதவிக் குழு பெண்கள் தேர்தல் விழிப்புணர்வு குறித்த வாழ்த்து மற்றும்  செய்தி மடல்கள் மூலம் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பொதுமக்கள் நியாயமான முறையில் தங்களது ஜனநாயகக் கடமையாற்ற வேண்டும் என்றார்.
நிகழ்ச்சியில், மகளிர் திட்ட இயக்குநர் சிவராமன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்த வாரம் பணவரவு யாருக்கு: வார பலன்கள்!

சேலம் அருகே மூன்று சடலங்கள்! கொலையா? தற்கொலையா? போலீஸ் விசாரணை

ஓடிடியில் ‘ஆவேஷம்’ எப்போது?

பெ. சுபாஷ் சந்திர போஸ் காலமானார்

சதுரகிரிக்குச் செல்ல மே.5 முதல் அனுமதி!

SCROLL FOR NEXT