வேலூர்

திருமலையில் கடத்தப்பட்ட குழந்தை பெற்றோரிடம் ஒப்படைப்பு

DIN

திருமலையில் ஞாயிற்றுக்கிழமை காலை கடத்தப்பட்ட 3 மாதக் குழந்தையை ஒரே நாளில் போலீஸார் கண்டுபிடித்து பெற்றோரிடம் ஒப்படைத்தனர். 
இதுகுறித்து போலீஸார் கூறியதாவது: திருமலையில் நடைபாதை வியாபாரம் செய்து வந்த விழுப்புரம் நரிக்குறவர் காலனியைச் சேர்ந்த மகாவீரன், கௌசல்யா தம்பதியரின் 3 மாதக் குழந்தை ஞாயிற்றுக்கிழமை காலை கடத்தப்பட்டது. இதுகுறித்து புகார் பெற்ற போலீஸார் கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆராய்ந்தனர். அதில் ஒரு பெண் அக்குழந்தையை கடத்திச் சென்றதைக் கண்டறிந்தனர். குழந்தை மற்றும் அப்பெண்ணின் புகைப்படத்தை சமூக வலைதளங்கள் மூலமாகவும், துண்டுப் பிரசுரங்கள் வாயிலாகவும் வெளியிட்டு தேடி வந்தனர்.
இந்நிலையில், குழந்தையை கடத்திச் சென்ற பெண் திருப்பதியில் இருந்து வேறு ஒருவருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டதை போலீஸார் கண்டறிந்தனர். அதன் அடிப்படையில் அப்பெண்ணை திங்கள்கிழமை கைது செய்து, குழந்தையை மீட்டு, பெற்றோரிடம் ஒப்படைத்தனர். 
விசாரணையில் குழந்தையை கடத்திச் சென்ற பெண் பெயர் துளசி, சித்தூர் மாவட்டம் கார்வேட்டிநகரம், வட்டிண்டுலா கிராமத்தைச் சேர்ந்தவர் என்பது தெரிய வ ந்தது. அவருக்கு குழந்தையில்லாததால் கணவர் பிரந்து சென்று விட்டார். பெற்றோர் இல்லாததால் பாட்டி விட்டு வசித்து வந்த துளசி திருமலையில் உள்ள ஓர் உணவகத்தில் கடந்த 45 நாள்களாகப் பணிபுரிந்து வந்தார். 
தன் தனிமையைப் போக்க ஒரு குழந்தையை வளர்க்க நினைத்த துளசி, இக்குழந்தையை கடத்திச் சென்றது விசாரணையில் தெரிய வந்தது. தொலைபேசி அழைப்பு விவரங்கள் மூலம் குழந்தையை ஒரே நாளில் கண்டுபிடித்துக் கொடுத்த காவல்துறையினரை திருப்பதி நகர காவல் கண்காணிப்பாளர் அன்புராஜன் பாராட்டினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆஸ்திரேலியா: காவல் துறை சுட்டதில் 16 வயது சிறுவன் உயிரிழப்பு

தரமில்லாத சாலையை பெயா்த்தெடுத்த ஊராட்சி மன்ற உறுப்பினா் கைது

நிரவி ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்த வலியுறுத்தல்

பரிசோதனைக்கு மாதிரி தர மறுப்பு: பஜ்ரங் புனியாவுக்கு இடைக்காலத் தடை

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ‘ப்ளூ காா்னா்’ நோட்டீஸ்

SCROLL FOR NEXT