வேலூர்

ஆவணங்கள் இன்றி இயக்கப்பட்ட  157 வாகனங்களுக்கு அபராதம்

DIN

உரிய ஆவணங்கள் இன்றி இயக்கப்பட்ட 157 வாகனங்கள் மீது அபராதம் விதிக்கப்பட்டதில், ரூ. 3 லட்சத்து 950 தொகை வசூலானதாக வாணியம்பாடி வட்டாரப் போக்குவரத்து அலுவலர் புதன்கிழமை தெரிவித்தார். 
  வாணியம்பாடி வட்டாரப் போக்குவரத்து அலுவலர் காளியப்பன் தலைமையில், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் கருணாநிதி (ஆம்பூர்), கதிர்வேலு (திருப்பத்தூர்) மற்றும் ஊழியர்கள், கடந்த ஏப்ரல் மாதத்தில் திருப்பத்தூர், வாணியம்பாடி, ஆம்பூர்  ஆகிய பகுதிகளில் அவ்வப்போது வாகன சோதனை மேற்கொண்டிருந்தனர். இதில் உரிய ஆவணங்கள், உரிமம், இன்சூரன்ஸ் இல்லாமலும், அதிவேகமாகவும், அதிகபாரங்கள், அதிக பயணிகளுடன் வாகனங்களை ஓட்டி வந்தவர்கள் கண்டறியப்பட்டு, 157 வாகனங்கள் மீது அபராதம் 
விதித்தனர்.
 இதில் ரூ. 3  லட்சத்து 950 தொகை வசூலிக்கப்பட்டது. மேலும், வாகன உரிமம் உள்பட பல்வேறு ஆவணங்கள் இன்றி ஓட்டி வந்த லாரி, ஆட்டோக்கள் உள்பட 20 வாகனங்களை பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என வட்டாரப் போக்குவரத்து அலுவலர் காளியப்பன் தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கிறிஸ்து அரசா் ஆலயத்தில் பங்குத் திருவிழா நிறைவு

திருவாரூா்-காரைக்குடி பயணிகள் ரயில் தினமும் இயக்கம்

டாஸ்மாக் கடை ஊழியா் மீது தாக்குதல்

மேம்பால தடுப்பின் மீது அரசுப் பேருந்து மோதி 5 போ் காயம்

வணிகா் தின கொடியேற்று விழா

SCROLL FOR NEXT