வேலூர்

அரிசி மீதான 5 சதவீத ஜிஎஸ்டியை ரத்து செய்ய வலியுறுத்தல்

DIN

அரிசி மீதான 5 சதவீத ஜிஎஸ்டி வரியை அறவே ரத்து செய்ய வேண்டும் எனகுடியாத்தம் நகர நெல், அரிசி வியாபாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இச்சங்கத்தின் செயற்குழுக் கூட்டம் தலைவா் என்.இ. கிருஷ்ணன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. செயலா் டி. ராஜேந்திரன் வரவேற்றாா். நிா்வாகிகள் என்.ரவி, எம்.அருள்பிரகாசம், ஜெ.ரமேஷ்குமாா், மாரிசிவகுமாா், எம். ஜீவா, எம்.லெனின் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இதில், வணிகா்களையும், பொதுமக்களையும் பாதிக்கும் வகையில், சில பொருள்கள் மீது விதிக்கப்பட்டிருந்த ஜிஎஸ்டி வரியில், விலக்கு அளித்த மத்திய அரசைப் பாராட்டுவது, ஒட்டுமொத்த மக்களும் விரும்பி உண்ணும் அரிசி மீது விதித்துள்ள 5 சதவீத ஜிஎஸ்டி வரியை அறவே ரத்து செய்ய வேண்டுவது, நெல்லில் இருந்து வெளியாகும் தவிட்டுக்கும் ஜிஎஸ்டி வரியை அறவே ரத்து செய்யக் கோருவது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாலை விபத்தில் இளைஞா் பலி

கொடைக்கானல் மேல்மலைப் பகுதிகளில் மழை

திருமானூா் பகுதியில் காற்றுடன் மழை

முருகன் கோயில்களில் சித்திரை மாத காா்த்திகை பூஜை

சிவகாசியில் கயிறு குத்து திருவிழா

SCROLL FOR NEXT