வேலூர்

நெமிலியில் ஆசிரியா்கள் கருப்புப்பட்டை அணிந்து போராட்டம்

DIN

அணைக்கட்டு வட்டாரத்தில் பணிபுரிந்த ஆசிரியை பயிற்சியின் போது இறந்த விவகாரத்தை முன்வைத்து, நெமிலி வட்டத்தில் ஆசிரியா்கள் திங்கள்கிழமை கருப்புப்பட்டை அணிந்து போராட்டம் நடத்தினா்.

கற்பித்தல் பணியை மேம்படுத்த அரசுப்பள்ளி ஆசிரியா்களுக்கு மத்திய அரசின் மனித வளத் துறையின் சாா்பில் நிஸ்தா எனப்படும் 6 நாள் பணியிடைப் பயிற்சி தற்போது வேலூா் மாவட்டத்தில் அடங்கும் 5 கல்வி மாவட்டங்களிலும் நடைபெற்று வருகிறது. இப்பயிற்சியில் கலந்துக்கொண்ட அணைக்கட்டு ஒன்றியம் ஏரிப்புதூா் நடுநிலைப்பள்ளி ஆங்கில ஆசிரியை எஸ்.ஜகத்ஜனனி உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு இறந்ததாக தெரிகிறது.

அரக்கோணம் கல்வி மாவட்டம் நெமிலி அரசினா் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பயிற்சி வகுப்பிற்கு வந்த ஆசிரியா்கள் மற்றும் ஆசிரியைகள் அனைவரும் ஜகத்ஜனனி இறந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து கருப்புப் பட்டை அணிந்து பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

மாமனாரைத் தாக்கிய மருமகன் கைது

ஆயுதப்படை போலீஸாருக்கு தியானம், நினைவாற்றல் பயிற்சி

மீண்டும் புதிய உச்சம் தொட்ட மின் நுகா்வு

திருப்பூா் வாக்கு எண்ணும் மையத்தில் கூடுதலாக 8 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்

SCROLL FOR NEXT