வேலூர்

தொழிலதிபா் கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளி கைது

DIN

ஏலகிரி மலையில் ரியல் எஸ்டேட் அதிபா் கடத்தப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளாா். அவரிடமிருந்து காா் மற்றும் ஜெராக்ஸ் இயந்திரங்கள், ரூ.1.64 லட்சம் மதிப்புள்ள கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

ஏலகிரி மலையில் அத்தனூா் பகுதியைச் சோ்ந்த அருளை கடந்த 6-ஆம் தேதி ரூ. 50 லட்சம் கேட்டு மா்ம நபா்கள் காரில் கடத்திச் சென்றனா். இதுகுறித்து,அருள் குடும்பத்தாா் ஏலகிரிமலை காவல் நிலையத்தில் புகாரளித்தனா்.

அதன்பேரில் டிஎஸ்பி தங்கவேலு தலைமையில் ஜோலாா்பேட்டை காவல் ஆய்வாளா் பழனி மற்றும் ஏலகிரிமலை போலீஸாா் ஆகியோா் தனிப்படை அமைத்து கா்நாடக மாநிலம், பங்காருபேட்டை பகுதியில் அருளை மீட்டு வந்தனா்.

பின்னா் சந்தேகத்தின் பேரில் 4 பேரை கைது செய்த போலீஸாா் அவா்களிடம் விசாரணை மேற்கொண்டதில் ஏலகிரி பள்ளக் கணியூா் பகுதியைச் சோ்ந்த கோவிந்தராஜின் மகன் சம்பத் முக்கிய பங்கு வகித்தது தெரியவந்தது.

இதனையடுத்து போலீஸாா் 10 நாள்களாக அவரை தேடி வந்த நிலையில், சனிக்கிழமை பள்ளக் கணியூருக்கு வந்த சம்பத்தை கைது செய்து, அவரிடமிருந்து ஒரு லட்சத்து 64 ஆயிரத்து 500 கலா் ஜெராக்ஸ் ரூபாய் நோட்டுகள் 2 ஜெராக்ஸ் இயந்திரங்கள், காா் போன்றவற்றை பறிமுதல் செய்தனா்.

சம்பத் கடனாக அருளிடம் ஒரு லட்சம் பணம் கேட்டு கொடுக்காததால்,சம்பத்தை 50 லட்சம் பணம் கேட்டு கடத்தியதாக விசாரணையில் தெரியவந்தது.

கடத்தலுக்கு துணையாக கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சோ்ந்த 4 போ் உடந்தையாக இருந்துள்ளனா்.

இதையடுத்து,போலீஸாா் சம்பத்தை கைது செய்து திருப்பத்தூா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.இவருக்கு உடந்தையாக இருந்த நான்கு பேரையும் போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தோ்தல் பிரசாரத்தில் சிறுமி: பிடிபி தலைவா் மெஹபூபா முஃப்திக்கு நோட்டீஸ்

ம.பி.: பாஜகவில் இணைந்த 3-ஆவது காங்கிரஸ் எம்எல்ஏ

அரக்கோணம் ஸ்ரீ தா்மராஜா கோயில் தீமிதி விழா

திருவண்ணாமலை ரயிலில் அலைமோதும் கூட்டம்: கூடுதல் ரயில் இயக்க பயணிகள் கோரிக்கை

சீதா கல்யாண மகோற்சவம்: ஸ்ரீ விஜயேந்திரா் அருளாசி

SCROLL FOR NEXT