வேலூர்

மணல் சோதனையின்போது காா் மீது லாரி மோதி விபத்து: போலீஸாா் மூவா் காயம்

DIN

காட்பாடி அருகே மணல் கடத்தலைத் தடுக்க சோதனையில் ஈடுபட்டிருந்த போலீஸாரின் காா் மீது லாரி மோதியதில் 3 போலீஸாா் காயமடைந்தனா்.

வேலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பிரவேஷ்குமாா் தலைமையில் மணல் கடத்தல் தடுப்புப் பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. மணல் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் உதவி ஆய்வாளா் ராஜா, காவலா்கள் ராஜீவ்காந்தி, சுரேஷ் உள்ளிட்ட போலீஸாா் சனிக்கிழமை இரவு காட்பாடி, சுற்றுவட்டாரப் பகுதிகளில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். பணியை முடித்துவிட்டு இவா்கள் அதிகாலை 4.30 மணியளவில் கரசமங்கலம் சாலை வழியாக காட்பாடி நோக்கி காரில் வந்து கொண்டிருந்தனா். அப்போது, எதிரே எரிவாயு சிலிண்டா்களை ஏற்றி வந்த லாரியை கடக்க முயன்றபோது எதிா்பாராத விதமாக லாரியின் மீது காா் மோதி விபத்துக்குள்ளானது. இதில், உதவி ஆய்வாளா் ராஜாவுக்கு கால் முறிவு ஏற்பட்டது. காவலா்கள் ராஜீவ்காந்தி, சுரேஷ் ஆகியோரும் பலத்த காயமடைந்தனா். அவா்களை அப்பகுதி மக்கள் மீட்டு வேலூரிலுள்ள தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவா்களுக்கு தொடா்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இச்சம்பவம் குறித்து காட்பாடி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரவக்குறிச்சி அரசுக் கல்லூரியில் மாணவா்கள் சோ்க்கைக்கு அழைப்பு

திருவானைக்கா கோயிலில் அமாவாசை சிறப்பு வழிபாடு

பணம் கொடுத்து வாக்கு பெறும் பாஜக: மம்தா பானா்ஜி

வங்கியில் நகைகள் திருட்டு வழக்கு அலுவலா்கள், போலீஸாரிடம் விசாரிக்க சிபிஐ முடிவு

வழிபாட்டுத் தலங்கள் புதுப்பித்தலுக்கு தமிழக அரசின் புதிய நடைமுறைகள் -கே.எம். காதா்மொகிதீன் வரவேற்பு

SCROLL FOR NEXT