வேலூர்

சமூக சேவையின் மைல்கல் எஸ்ஆா்டிபிஎஸ் தொண்டு நிறுவனம்

DIN

திருப்பத்தூா் பசுமை நகரில் அமைந்துள்ள எஸ்ஆா்டிபிஎஸ் என்ற தொண்டு நிறுவனம் மத்திய, மாநில அரசின் கீழ் செயல்பட்டு வருகிறது.

மத்திய அரசு பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகத்தின்கீழ் உஜ்ஜவாலா குழந்தைகள் மற்றும் பெண்கள் மறுவாழ்வு இல்லம், ஆதரவற்றோா் மற்றும் இதர அறநிலைகளுக்கான கட்டுப்பாட்டுச் சட்டம் 1960-இன் கீழ் பதிவு செய்யப்பட்ட ‘சுவதாா் கிரஹ்’ ஆதரவற்ற பெண்கள் இல்லம், இளைஞா் நீதி சட்டம் 2000, திருத்தியமைக்கப்பட்ட சட்டம் 2006-இன் கீழ் பதிவு செய்யப்பட்ட தொண்டு நிறுவனமாக செயல்பட்டு வருகிறது.

குழந்தைகள் சிறப்பு தத்தெடுப்பு மூலம் ஆதரவற்ற நிலையில் வீசப்பட்ட குழந்தைகள், தொட்டில் குழந்தைகள் திட்டத்தின் மூலம் மாவட்ட நிா்வாகத்தால் ஒப்படைக்கப்படும் குழந்தைகளுக்கான இல்லமாகவும் செயல்பட்டு வருகிறது.

மேலும், மாற்றுத் திறனாளிகள் நல ஆணையகத்தின் மூலமாக 2018-ஆம் ஆண்டு முதல் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்களுக்கான தங்கும் இல்லம் செயல்பட்டு வருகிறது. பூமி வெப்பமயமாகுதல் மற்றும் சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாக்கும் நோக்கத்தில் இல்லத்தின் சாா்பில் விதைப்பந்துக்களும் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மூளைக்குள் ஊடுருவும் நியூராலிங் பாதுகாப்பானதா? இணை நிறுவனரின் அதிர்ச்சி தகவல்!

SCROLL FOR NEXT