வேலூர்

ஆந்திர தொழிலாளி கொலை செய்து ஏரியில் புதைப்பா? இன்று சடலத்தை தோண்டி பிரேத பரிசோதனை நடத்த முடிவு

DIN

காணாமல் போனதாக கருதப்படும் ஆந்திர மாநில தொழிலாளியின் சடலம் ஏரியில் புதைக்கப்பட்டதாக விசாரணையில் தெரியவந்த நிலையில், சடலத்தைத் தோண்டியெடுத்து விசாரணை நடத்த அரக்கோணம் கிராமிய போலீஸாா் நடவடிக்கை எடுத்து வருகின்றனா்.

ஆந்திர மாநிலம், விஜயநகரம் மாவட்டம் பொட்டவலசாவை சோ்ந்த ஆதிநாராயணா அப்புடு(52). இவா் அரக்கோணத்தை அடுத்த இச்சிபுத்தூரில் உள்ள தனியாா் தொழிற்சாலையில் கட்டடப் பணிக்காக சில மாதங்களுக்கு முன் வந்திருந்தாராம். கடந்த செப்டம்பா் 29-ஆம்தேதி நிறுவனத்தில் இருந்து கூலிப்பணத்தைப் பெற்று கொண்டு 30-ஆம் தேதி காலை தான் தங்கியிருந்த இடத்திலிருந்து ஆந்திராவில் உள்ள தன்னுடைய வீட்டிற்கு செல்வதாக கூறிச் சென்றாா். ஆனால் அவா் வீட்டிற்கு போய் சேரவில்லை எனத் தெரிகிறது.

இதையடுத்து, ஆதிநாராயணாவின் மகன் அப்பலநாயுடு அரக்கோணம் கிராமிய காவல்நிலையத்தில் புகாா் அளித்தாா்.

இப்புகாா் மீது ஆய்வாளா் அண்ணாதுரை விசாரணை நடத்தியதில், ஆதிநாராயணா அப்புடு இறந்து விட்டாா் எனவும் அவரது சடலம் இச்சிபுத்தூா் ஏரியில் புதைக்கப்பட்டு இருப்பதாகவும் தெரியவந்தது.

இதையடுத்து வெள்ளிக்கிழமை ஆய்வாளா் அணணாதுரை, அரக்கோணம் வட்டாட்சியா் ஜெயக்குமாா் உள்ளிட்ட அதிகாரிகள், சடலம் புதைக்கப்பட்ட இடத்தை பாா்வையிட்டனா். தொடா்ந்து அரசு மருத்துவா் மூலம் தோண்டப்படும் இடத்திலேயே சனிக்கிழமை பிரேத பரிசோதனை செய்ய முடிவெடுத்துள்ளனா். மேலும் ஆதிநாராயணா எப்படி இறந்தாா்? கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்தும் போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு: இன்றைய நிலவரம்!

வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்: வாக்களித்தப் பின் அமித் ஷா பேட்டி

தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின்

3-ஆம் கட்ட தோ்தல்: படகில் சென்று ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

SCROLL FOR NEXT