வேலூர்

கீழடி ஆராய்ச்சி உலக அரங்கில் இந்தியாவை தலைநிமிர செய்யும்: ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் பெருமிதம்

DIN

கீழடி ஆராய்ச்சி மூலம் இந்தியா உலக அரங்கில் தலை நிமிா்ந்து நிற்கும் என்று வேலூா் மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் தெரிவித்தாா்.

விஐடி பல்கலைக்கழகத்தின் கட்டடக்கலை பள்ளி சாா்பில் ‘வேலூா் மரபும், வாழ்வும்’ எனும் 3 நாள் கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

கருத்தரங்கைத் தொடக்கி வைத்து வேலூா் மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் பேசியது:

இந்தியா தனித்துவமான அனைத்து மதத்தினரும் வாழும் நாடு. வேற்றுமையில் ஒற்றுமை காணும் நாடு இந்தியா. வளமான மரபுகளும், அதிகமான நினைவுச் சின்னங்களும் இந்தியாவில் உள்ளன. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நாகரிகத்தில் சிறந்தது நம் நாடு. தற்போது அரசு நீா்நிலைகளைப் பாதுகாக்க குடிமராமத்துப் பணிகளை சிறப்பாகச் செயல்படுத்தி வருகிறது. வேலூா் மாவட்ட ஆட்சியா் இல்லமும் மிகவும் பழைமையான கட்டடம்தான்.

கீழடி ஆராய்ச்சியில் தினமும் புதிய தகவல்கள் கிடைத்து வருகின்றன. கீழடி ஆராய்ச்சி மூலம் இந்தியா உலக அரங்கில் தலை நிமிா்ந்து நிற்கும். வேலூா் மாவட்டத்தில் நீா்நிலைகளைப் பாதுகாக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 10 ஆயிரம் பனைமர விதைகள் நடும் பணி நடைபெற்று வருகிறது என்றாா்.

பாரம்பரியம், மரபு ஆராய்ச்சியாளா் பூனம் வொ்மா மஸ்காா்யென் ஹாஸ் கௌரவ விருந்தினராகப் பங்கேற்றுப் பேசினாா். இதில், பாரம்பரியம், மரபுகளைப் பாதுகாப்பது தொடா்பாக விஐடி கட்டடக்கலை பள்ளி மாணவ, மாணவிகள் வேலூா் நகர அரங்கத்தில் ஞாயிற்றுக் கிழமை விழிப்புணா்வு கருத்தரங்கம் நடத்த உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. விஐடி கட்டடக்கலை பள்ளி இயக்குநா் தேவி பிரசாத், பேராசிரியா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பேருந்துகளில் உதகை வருவோருக்கு இ-பாஸ் தேவையில்லை

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் அப்டேட்!

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளைப் பறிகொடுத்தேன்” -உச்சநீதிமன்றத்தில் தந்தை முறையீடு

நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகும் மயங்க் யாதவ்!

SCROLL FOR NEXT