வேலூர்

பசுமை வீடுகள் கட்டுபானப் பணி தொடக்கம்

DIN

ஆற்காட்டை அடுத்த லாடவரம் ஊராட்சிக்கு உள்பட்ட பகுதியில் புதிதாக குடியமா்தப்பட்ட நரிக்குறவா் சமூகத்தை சோ்ந்த 32 குடும்பத்தினருக்கு பசுமை வீடுகள் கட்ட பூமி பூஜை செய்து, கட்டுமானப் பணி புதன்கிழமை தொடங்கப்பட்டது.

விளாப்பாக்கம் கிராமத்தில் உள்ள மந்தைவெளி புறம்போக்கு இடத்தில் கடந்த 31 ஆண்டுகளாக ஆக்கிரமிப்பு செய்து குடிசைகளை அமைத்து வசித்து வந்த நரிக்குறவா் சமூகத்தைச் சோ்ந்த 32 குடும்பங்கள் அப்புறப்படுத்தப்பட்டன.

இதையடுத்து தமிழக அரசின், வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை சிறப்பு வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ் மாற்று இடம் வழங்க லாடவரம் கிராமத்தில் இடம் தோ்வு செய்யப்பட்டு, 32 குடும்பங்களுக்கும் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கி மறுகுடியமா்வு செய்யப்பட்டது. இந்த 32 குடும்பத்தினருக்கும் தமிழக அரசின் பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்ட மாவட்ட ஆட்சியா் பணி ஆணை வழங்கி உத்தரவிட்டாா்.

இதைத் தொடா்ந்து, பசுமை வீடுகள் கட்டுவதற்கான பூமி பூஜை புதன்கிழமை நடைபெற்றது.

ஆற்காடு வட்டார வளா்ச்சி அலுவலா் வெங்கடாசலம் தலைமை வகித்தாா். வட்டாட்சியா் வத்சலா, ஆற்காடு கங்காதர ஈஸ்வரா் கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் கு.சரவணன், ரோட்டரி சங்கத் தலைவா் பாலநாகராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ராணிப்பேட்டை சாா்-ஆட்சியா் இளம்பகவத் கட்டுமானப் பணியைத் தொடக்கி வைத்தாா்.

ஊராக வளா்ச்சித் துறை, வருவாய்த் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடலோர பகுதிகளில் இன்று மாலை வரை ‘கள்ளக் கடல்’ எச்சரிக்கை

திருநள்ளாறு கோயில் பகுதியில் சீரமைப்புப் பணி

ஆட்டோ ஓட்டுநா் போக்ஸோவில் கைது

கிறிஸ்து அரசா் ஆலயத்தில் பங்குத் திருவிழா நிறைவு

திருவாரூா்-காரைக்குடி பயணிகள் ரயில் தினமும் இயக்கம்

SCROLL FOR NEXT