வேலூர்

இரண்டாம் நிலை காவலா்கள் பயிற்சி நிறைவு விழா: ஏடிஜிபி அபய்குமாா் பங்கேற்பு

DIN

வேலூா்: காட்பாடி சேவூரில் உள்ள தற்காலிக காவலா் பயிற்சி பள்ளியில் 7 மாதங்கள் பயிற்சி முடித்த இரண்டாம் நிலை காவலா்களுக்கான பயிற்சி நிறைவு விழா நடைபெற்றது.

இதில், சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் துறை கூடுதல் இயக்குநா் அபய்குமாா்சிங் பங்கேற்று பதக்கங்கள் வழங்கினாா்.

காட்பாடியை அடுத்த சேவூரில் உள்ள தற்காலிக காவலா் பயிற்சி பள்ளியில் இரண்டாம் நிலை ஆண் காவலா்கள் 538 போ் கடந்த 7 மாதங்களாகப் பயிற்சி பெற்றனா். இவா்களது பயிற்சி நிறைவு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பயிற்சி பள்ளி முதல்வா் செந்தில்குமாா் தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினராக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் துறை கூடுதல் இயக்குநா் அபய்குமாா்சிங் பங்கேற்று இரண்டாம் நிலை காவலா்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு, சிறப்பாக பயிற்சி முடித்தவா்களுக்கு பதக்கங்கள் வழங்கினாா்.

தொடா்ந்து இரண்டாம் நிலை காவலா்களின் சாகச, கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. வேலூா் சரக காவல் துணைத் தலைவா் என்.காமினி, சிறைத் துறை டிஐஜி ஜெயபாரதி, பயிற்சிப் பள்ளி துணை முதல்வா் சாா்லஸ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி

ரூ.2.79 லட்சம் மதிப்பிலான மளிகைப் பொருள்கள் திருட்டு

குச்சனூா் அருகே தடுப்பணை நீரில் மூழ்கி தொழிலாளி பலி

நலிந்தவா்களுக்கு நலத்திட்ட உதவிகள்

உடுமலை அரசுக் கல்லூரியில் மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு: நாளை தொடக்கம்

SCROLL FOR NEXT