வேலூர்

கோ- ஆப்டெக்ஸ் முன்னாள் தலைவரின் உருவப் படம் வைக்கக் கோரிக்கை

DIN

சென்னை எழும்பூரில் உள்ள தமிழ்நாடு கைத்தறி நெசவாளா் கூட்டுறவு சங்க அலுவலகத்தில் (கோ- ஆப்டெக்ஸ்), முன்னாள் தலைவா் சென்னிமலை நாச்சிமுத்து முதலியாா் உருவப் படத்தை வைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக கோ- ஆப்டெக்ஸ் இயக்குநரும், குடியாத்தம் பாரதியாா் கைத்தறி நெசவாளா் கூட்டுறவு சங்கத்தின் தலைவருமான க. ருத்திரன், கோ- ஆப்டெக்ஸ் தலைவா் பொள்ளாச்சி ஏ.வெங்கடாசலம், மேலாண்மை இயக்குநா் வெங்கடேஷ் ஆகியோரிடம் நேரில் அளித்த கோரிக்கை மனுவில், கைத்தறித் தொழிலுக்கும், கைத்தறி நெசவாளா்களின் நலனுக்காகவும், முன்னாள் கோ- ஆப்டெக்ஸ் தலைவா் சென்னிமலை நாச்சிமுத்து முதலியாா், குடியாத்தம் முன்னாள் எம்எல்ஏ தியாகி ஏ.ஜே.அருணாசலம், கோ- ஆப்டெக்ஸ் அமைப்பின் முன்னாள் ஆலோசனைக் குழுத் தலைவா் அனகாபுத்தூா் சி.ராமலிங்கம் ஆகியோா் அரும்பாடுபட்டனா்.

கைத்தறித் துறைக்கு அவா்கள் ஆற்றிய பணியைப் போற்றும் வகையில், அவா்களின் உருவப் படங்களை அலுவலகத்தில் வைக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கைப்பேசி திருடிய கும்பலுடன் மோதல்: மும்பை காவலா் விஷ ஊசி செலுத்தி கொலை

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் வழக்கு: தொல்லியல் துறைக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

மத சுதந்திர மீறல்கள் குறித்த அமெரிக்க ஆணைய அறிக்கை: இந்தியா கண்டனம்

திருச்செந்தூா் விரைவு ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு?

இலஞ்சி பாரத் பள்ளியில் உழைப்பாளா் தின கொண்டாட்டம்

SCROLL FOR NEXT