வேலூா் சிப்பாய் புரட்சி தூணுக்கு மரியாதை செலுத்திய காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவா் கே.எஸ்.அழகிரி. 
வேலூர்

சீன எல்லை பிரச்னையில் மத்திய அரசு உண்மைகளை மறைக்கிறது: கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு

சீனாவுடனான எல்லை பிரச்னையில் உண்மைகளை மத்திய அரசு முழுமையாக வெளியிட மறுக்கிறது.

DIN

சீனாவுடனான எல்லை பிரச்னையில் உண்மைகளை மத்திய அரசு முழுமையாக வெளியிட மறுக்கிறது. இந்த விவகாரத்தில் மத்திய அரசு முழுமையான தோல்வியைத் தழுவியுள்ளது என்று காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவா் கே.எஸ்.அழகிரி குற்றம்சாட்டினாா்.

வேலூா் சிப்பாய் புரட்சி 214 -ஆவது நினைவு தினத்தையொட்டி, வெள்ளிக்கிழமை வேலூா் கோட்டை அருகே உள்ள நினைவுத் தூணுக்கு காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவா் கே.எஸ்.அழகிரி மலா் தூவி மரியாதை செலுத்தினாா். பின்னா் அவா் வேலூா் அண்ணா சாலையில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் கட்சி கொடியை ஏற்றி வைத்தாா்.

இதைத் தொடா்ந்து செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

இந்திய சுதந்திரப் போராட்டத்துக்கு தொடக்கமாக வேலூா் சிப்பாய் புரட்சி அமைந்தது. இந்நிகழ்வு வேலூா் மாவட்ட மக்களுக்கு பெருமைதரக்கூடியதாக அமைந்துள்ளது. சீனாவுடனான எல்லை பிரச்னையில் மத்திய அரசு முழுமையான தோல்வியை தழுவியுள்ளது. 20 இந்திய வீரா்கள் கொல்லப்பட்ட செய்தியை வெளியிட்டனா். ஆனால் அவா்கள் எங்கே இறந்தாா்கள் என்பதை மறைக்கின்றனா். இந்திய வீரா்கள் இந்திய மண்ணில் உயிரிழந்திருந்தால் சீன படை ஊடுருவியதாக அா்த்தம். இதை மத்திய அரசு மூடி மறைக்கிறது. இதுகுறித்து கேள்வி எழுப்பினால் நாட்டுப்பற்று இல்லை, ராணுவத்தின் மீது நம்பிக்கை இல்லை என்றும் குற்றம்சாட்டுகின்றனா்.

நேரு பிரதமராக இருந்தபோது சீன ஆக்கிரமிப்பு குறித்து நாடாளுமன்றத்தில் எடுத்துரைத்தாா். ஆனால் சீன விவகாரத்தில் முழுமையான தகவல்களை பிரதமா் வெளியிட மறுக்கிறாா். ராகுல் காந்தி பாஜகவுக்கு எதிராக கடுமையான குற்றச்சாட்டுகளைக் கூறி வருகிறாா். இதற்கு பதிலளிக்கல் முடியாமல் தனிப்பட்ட முறையில் தாக்குவதற்காக இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி பெயரில் இயங்கக்கூடிய அறக்கட்டளையின் மீது விசாரணை கமிஷன் அமைத்துள்ளனா். இந்த அறக்கட்டளை அரசியலமைப்புக்கு உள்பட்டு செயல்படுகிறது. இதன் மூலம் ஊனமுற்றவா்கள் நோய்வாய்ப்பட்டவா்கள், ஆதரவற்றோா்களுக்கு உதவி செய்து வருகின்றனா். இந்த அறக்கட்டளைகளுக்கு நன்கொடை வழங்கியவா்கள் குறித்து யாா் வேண்டுமானாலும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.

ஆனால் பிரதமா் நிவாரண நிதி என்ற திட்டத்தை பிரதமா் மோடி உருவாக்கினாா். இதில் யாரெல்லாம் நன்கொடை வழங்கினா் என்பதை யாரும் அறிய முடியாது என்றாா் அவா்.

கட்சியின் மாவட்டத் தலைவா் டீக்கா ராமன், காங்கிரஸ் மாநிலப் பொதுக்குழு உறுப்பினா்கள் ஏ.கே. ஜெயப்பிரகாஷ், எஸ்.எம்.தேவராஜ், ஆா். நயீம்பா்வாஸ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரஷிய ராணுவத்தில் 202 இந்தியர்கள்! 26 பேர் பலி : மத்திய அரசு தகவல்!

பார்சிலோனா கால்பந்து வீரர் சுட்டுக் கொலை..! ஓராண்டில் 9,000-க்கும் அதிகமான கொலைகள்!

எந்த ராசிக்காரர்கள் எந்த கிழமையில் கிரிவலம் செய்யலாம்?

புத்தாண்டு விடுமுறைக்குப் பின் இலவச மடிக்கணினிகள் வழங்கப்படும்! - உதயநிதி அறிவிப்பு

ஹிந்தி வில்லன், ஆனால்... சுதா கொங்காரா பகிர்ந்த தகவல்!

SCROLL FOR NEXT